Your cart is empty.
வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை (இ-புத்தகம்)
-
To get 15.00% discount on All books 2025 Spend ₹1,000.00 more from All books 2025
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாத மேலும்
-உ.வே.சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை
இருவிதங்களில் அணுக மேலும்
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில மேலும்
மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பத மேலும்
பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந மேலும்
சிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே மேலும்
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய இந்தப் புத்தகம் மேலும்
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் மேலும்
ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்ல மேலும்
கேரளத்து மலபார் பிரதேசத்தின் வனாந்திரக் குக்கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஓர் ஆசிரிய மேலும்
‘கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும் மேலும்
கவிஞர் இசையின் சமீபத்தியக் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மிகுதியும் கவிதைகளைப் பற் மேலும்
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த மேலும்
-அம்பேத்கர் எழுதிய கடிதங்களின் இந்தத் தொகுப்பு, தலித் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றைச் சொல்லும் ஆவணம். இருட்டுக்குள் தத்தளித்துக்கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை நோக்கி வழிநடத்திய தீப்பந்தம். பட்டியல் சாதி மக்களின் ஒப்பற்ற தலைவரின் உத்வேக முழக்கம்.
சாதி மத பேதமின்றிப் பலரையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்காகச் சிந்தித்த மகத்தான மனிதரின் கைகள் வரைந்த வரலாற்றுச் சித்திரங்கள் இந்தக் கடிதங்கள்.
அம்பேத்கரின் மேடைப் பேச்சின் ஊக்கமும் அவரது வயலின் இசையின் துயரமும் ஒருங்கே பிரதிபலிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை இக்கடிதங்களில் உணரலாம். தலித்துகளின் போராட்ட வரலாற்றில் இவற்றுக்கு முக்கிய இடமுண்டு. கால்களின் சுவடுகள் போல இவை கைகளின் சுவடுகள்.
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மானியத்தில் ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தாட்சர் மூடிவிட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றார்கள். குடும்பங்கள் சிதையத் தொடங்கின. தொழிலாளர் வர்க்கம் பெரும் சீரழிவுக்குள்ளாகியது.
லாப நஷ்டக் கணக்கு பார்த்துச் செயல்படும் முதலாளித்துவ அரசாங்கங்கள் அடித்தட்டு மக்களைப் பொருட்டாகக் கருதுவதில்லை என்பதற்கான இலக்கிய சாட்சியங்களில் ஒன்று டக்ளஸ் ஸ்டூவர்ட்டின் ‘ஷகி பெய்ன்.’ இந்தப் பிரச்சினையின் பின்னணியில் ஷகி பெய்ன் என்னும் இளைஞனையும் அவன் குடும்பத்தையும் சுற்றி இந்த நாவல் வளர்கிறது. தன்பாலீர்ப்பாளர்கள், பால்புதுமையினர் பற்றிய நுட்பமான சித்தரிப்புகளும் இந்த நாவலில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளன. எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத பாசப் பிணைப்பு கொண்ட தாய் - மகன் உறவும் இந்த நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
நாவலாசிரியரின் குரல் வாசகரின் இதயத்தைத் துளைப்பதற்குக் காரணம் அதன் உண்மைத்தன்மையும் வீரியமும்தான்.
-உ.வே.சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை
இருவிதங்களில் அணுகுகிறார். ஒன்று அவரது பதிப்பு நுட்பங்களையும் பதிப்பு வரலாற்றையும்
ஆய்வது. அவர் எழுதிய உரைநடை நூல்களிலிருந்து பெறுபவற்றைச் சமகாலம் சார்ந்து
விளக்குவது இரண்டாவது. இந்த இரண்டு அணுகுமுறை களிலும் எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பு இந்த நூல்.
முதல் அணுகுமுறையில் அமைந்த கட்டுரைகள் உ.வே.சா.வின் பதிப்புச் செயல்பாடுகள்பற்றி
ஆழமான பார்வைகளைக் கொண்டவை. மற்ற கட்டுரைகள் உ.வே.சா.வின் கருத்துக்கள்,
அணுகுமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றின் வெளிச்சத்தில் சமகால அரசியலையும் சமூகப்
பிரச்சினைகளையும் அலசுகின்றன. வெளிவந்தபோது பலவித எதிர்வினைகளைப் பெற்ற
கட்டுரைகள் இவை.
உ.வே.சா.வை அவருடைய பணிகள் சார்ந்தும் அவருடைய வாழ்வையும் கருத்துக்களையும்
சமகாலப் பார்வை சார்ந்தும் நெருக்கமாக அணுகிப் பார்க்கும் இந்தக் கட்டுரைகள் உ.வே.சாவைப்
பற்றிய புரிதலை ஆழப்படுத்தக்கூடியவை.
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது. 26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம். நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. அதிகாரமும் தொழில்நுட்பமும் மக்கள் மனநிலையை நிர்வகிக்கக் கற்றுக்கொள்கின்றன. நம்மைச் சிந்திக்கவைத்துப் பதறவைக்கிறது இப்படைப்பு.
இதில் சொல்லப்படும் ‘சாதிய’ப் படிநிலையமைப்பு இந்த நாவலைத் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக்குகிறது. தமிழில் ஜி. குப்புசாமியின் சரளமான மொழியாக்கத்தில், இப்போது உங்கள் கையில். இது வெறும் கற்பனை அல்ல; நம்முடைய எதிர்காலமாகக்கூட இருக்கலாம்.
மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்? மரங்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன, அன்னை மரங்கள் இளம் மரங்களை ஆதரித்துப் பராமரிக்கின்றன என்றால் நம்புவீர்களா? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவரிடமிருந்து பதிலேதும் பேசாமல் நழுவிவிடவே முயல்வீர்கள். ஆனால் அவர், மரங்களுக்கு நினைவாற்றல் உண்டு, நாம் பேசுவதை அவை கேட்கும், அவற்றுக்கு ஒரு மொழி உண்டு, நண்பர்கள் உண்டு அவற்றால் வண்ணங்களை அறிந்துகொள்ள முடியும் என்றெல்லாம் சொன்னால் அவரிடமிருந்து அவசரமாகத் தப்பி ஓடிவிடுவீர்கள்.
ஆனால் அவையெல்லாம் உண்மையென்று ஒரு வன ஆய்வாளரே ஆதாரங்களுடன் விளக்கினால் என்ன செய்வீர்கள்? மரங்கள் பற்றிய நமது எண்ணங்களைத் தவிடுபொடியாக்குகிறார் பீட்டர் வோலிபென். மரங்களுக்கும் பார்க்கவும் உணரவும் சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்கிறது அவரது இந்நூல்.பிரதீப் கிரிஷன் (புகழ்பெற்ற சூழலியளாளர்)
பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர்.
பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திரைப்படம் தொடர்பான கட்டுரைகளும் உள்ளன.
இந்தக் கட்டுரைகளில் தத்துவம் இருக்கிறது. அரசியல் கூர்ப்புண்டு. விஞ்ஞானக் கண்ணோட்டம் இழையோடுகிறது. அழகியல் நோக்குள்ளது. நுனிப்புல் மேய்தல்? இல்லை.
ஆழ்வார் பாசுரங்கள், மணிமேகலை, திருக்குறள் முதலிய பண்டைய இலக்கியங்கள் முதல் கு. அழகிரிசாமி, தி. ஜானகி ராமன், தஸ்தயேவ்ஸ்கி, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன், ஆத்மாநாம், பெருமாள்முருகன், பெருந்தேவி முதலான நவீன படைப்பாளிகளின் ஆக்கங்கள்வரை பல்வேறு இலக்கியப் பிரதிகளைப் பற்றிய ஆழமான, தனித்துவமான அலசலை இக்கட்டுரைகளில் காணலாம். பா. இரஞ்சித், ராம் ஆகிய இயக்குநர்களின் திரைப்படங்களைப் பற்றிய பார்வையும் இதில் உள்ளது.
இலக்கிய வாசகர்களும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.
சிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே உறையும் அர்த்தங்களையும் நுட்பங்களையும் கண்டு சொல்ல முடியும். பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் அத்தகைய விமர்சகர்களில் ஒருவர். பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள்வரை அவர் அலசும் ஒவ்வொரு பிரதியும் புதுப்புது முகங்களைக் காட்டுகின்றன. வாசிப்பின் புதிய கதவுகளைத் திறக்கின்றன.
இக்கட்டுரைகளின் முக்கியமான பலம் இவற்றில் ஊடாடும் கற்றல், கற்பித்தல் பண்புகள். ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒருவகையில் அறிதலைத் தருவதாக அமைந்துள்ளது. கல்யாணராமனின் தனித்துவமான அலசல்களில் வெளிப்படும் தரிசனங்கள் இந்நூலில் ‘அமுதின் அமு’தாகத் திரண்டுள்ளன.
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸைப் பற்றிய இந்தப் புத்தகம், அவருடைய அரசியல், சமூக, தார்மீக உறுதிப்பாடுகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது.
நூலாசிரியர் சுகாதோ போஸ், கல்கத்தா, கேம்பிரிட்ஜ் ஆகியவற்றைச் சார்ந்த அறிவுசார் சூழலில் நேதாஜி உருவான விதத்தை அற்புதமாகச் சித்திரிக்கிறார். தேசியவாத அரசியலின் உச்சத்தை அவர் எட்டியதை விளக்குகிறார். இந்துக்கள், முஸ்லிம்கள், ஆண்கள், பெண்கள், பல்வேறு மொழிபேசும் குழுக்களை ஆகியோரை ஒரே சுதந்திர இந்திய தேசத்திற்குள் ஒன்றிணைக்கும் நேதாஜியின் லட்சியப் பார்வையைத் தெளிவாகத் தீட்டிக்காட்டுகிறார். அவர் மரணம் பற்றி இந்த நூல் தரும் தகவல் இந்த அமர நாயகனின் வாழ்க்கை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
நேதாஜியின் வாழ்க்கை விறுவிறுப்பாகவும் நுண்ணுணர்வுடனும் அந்தக் காலகட்டத்து அரசியல் குறித்த தெளிவான பிரக்ஞையுடனும் பதிவாகியுள்ளது. ஆதாரப்பூர்வமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல் நேதாஜியையும் அவரது காலத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
இதழாளர் என். வினோத்குமார் சரளமான நடையில் இந்த நூலைத் தமிழில் தந்திருக்கிறார்.
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சாகமே இத்தகைய கட்டுரைகளை எழுத அவரைத் தூண்டியது.
ஒரு கவிஞரின் ஒரு கவிதையை எடுத்து விளக்குவதே இந்தக் கட்டுரைகளின் பொதுவியல்பு. கவிஞரைப் பற்றிய தகவல்கள், அவர் கவியுலகம் குறித்த பார்வைகள் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன. கவிதையை விளக்கத் தன் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள பெருமாள்முருகன், இலக்கிய இலக்கண மரபு சார்ந்த கோட்பாடுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
கவிதையின் சுவை உணர்ந்து நவீன கவிதைக்குள் செல்வதற்கு உதவும் நயநூல் என இதைச் சொல்லலாம்.
-இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை பத்மசாலி சமூகத்தை நோக்கிய தனது போராட்டத்தை முன்வைக்கிறார். அனுதாபத்தையோ பரிதாபத்தையோ அவர் கோரவில்லை. சமூக ஏற்பையும் மரியாதையையும் கோருகிறார். நேர்மையுடன் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அக்கையின் எழுத்து, ஒரு அரசியல் செயல்பாடாகும். இன்று இருக்கும் இடத்தை அடைவதற்காகத் தான் பட்ட வேதனை, அவமானம், குழப்பம், அவமதிப்பு, அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி என அனைத்தையும் வெளிப்படையாகக் கூறுகிறார். தனது கதை தன்னுடைய கதை மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகிறார்.
இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை பத்மசாலி சமூகத்தை நோக்கிய தனது போராட்டத்தை முன்வைக்கிறார். அனுதாபத்தையோ பரிதாபத்தையோ அவர் கோரவில்லை. சமூக ஏற்பையும் மரியாதையையும் கோருகிறார். நேர்மையுடன் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அக்கையின் எழுத்து, ஒரு அரசியல் செயல்பாடாகும். இன்று இருக்கும் இடத்தை அடைவதற்காகத் தான் பட்ட வேதனை, அவமானம், குழப்பம், அவமதிப்பு, அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி என அனைத்தையும் வெளிப்படையாகக் கூறுகிறார். தனது கதை தன்னுடைய கதை மட்டுமல்ல என்பதை வலியுறுத்துகிறார்.
-பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சாகமே இத்தகைய கட்டுரைகளை எழுத அவரைத் தூண்டியது.
ஒரு கவிஞரின் ஒரு கவிதையை எடுத்து விளக்குவதே இந்தக் கட்டுரைகளின் பொதுவியல்பு. கவிஞரைப் பற்றிய தகவல்கள், அவர் கவியுலகம் குறித்த பார்வைகள் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன. கவிதையை விளக்கத் தன் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள பெருமாள்முருகன், இலக்கிய இலக்கண மரபு சார்ந்த கோட்பாடுகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
கவிதையின் சுவை உணர்ந்து நவீன கவிதைக்குள் செல்வதற்கு உதவும் நயநூல் என இதைச் சொல்லலாம்.
சுதந்திர தினச் சிறப்புச் சலுகை
ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில்
கேப்ரியேல் கார்ஷியா மார்க்குவஸின் உலகப் புகழ்பெற்ற மூன்று நாவல்களையும் சலுகை விலையில் பெறலாம்.
நூறாண்டு காலத் தனிமை
முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்
காலரா காலத்தின் காதல்
இந்த மூன்று நூல்களின் மொத்த விலை: ரூ. 1300.
மூன்றையும் சேர்த்து வாங்குவோருக்கான சலுகை விலை: ரூ. 890
ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று தேதிகளில் காலச்சுவடு இணையதளம் மூலமாக வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை.
ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்லை. இந்தப் பணியை அ.கா. பெருமாள்
தொடர்ந்து செய்துவருகிறார். இவரது ‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற நூலை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சி இந்த நூல்.
கேரளத் தோல்பாவைக் கூத்தில் நிகழ்த்தப்படும் ராமாயணம் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூலின் இரண்டாவது பகுதியில் ‘தெய்வங்கள்’ என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் வழக்காறுகளுடன் தொடர்புடையவை. நாட்டார் மரபில் பெருநெறி வழிபாட்டின் தாக்கம் முற்காலத்திலேயே வந்துவிட்ட செய்தி விரிவாக விளக்கப்படுகிறது.
இதுபோன்ற பல புதிய தகவல்களையும் பார்வையையும் கொண்ட எளிமையான ஆராய்ச்சி நூல் இது. ராமாயணத்தின் தாக்கம் நாட்டார் மரபில் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
கேரளத்து மலபார் பிரதேசத்தின் வனாந்திரக் குக்கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஓர் ஆசிரியை மாநிலத்தின் சுகாதார அமைச்சராகிப் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய கதை இது.
கே.கே. ஷைலஜா, கேரளச் சுகாதாரத் துறையைப் புத்துருக்கிச் சீரமைத்துத் தரமான மருத்துவச் சேவையை அம்மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். இந்தப் புத்தகம் அவரது தன்வரலாற்றையும் அரசியல் பயணத்தையும் மட்டும் பேசவில்லை; மலபார் பிரதேசத்தின் சமூக அமைப்பு, பண்பாடு, கேரள அரசியல் வரலாறு ஆகியவைபற்றியும் பேசுகிறது.
இது ஒரு சாதாரண அரசியல்வாதியின் சாதனைகளைப் பேசும் சம்பவங்களின் தொகுப்பல்ல; சமூக மாற்றம் என்ற தனது பெருங்கனவை மக்களின் பிரதிநிதியாகத் தனக்குக் கிடைத்த பதவியின் மூலம் நனவாக்க முயன்ற ஓர் இலட்சியவாதியின் நினைவுக் குறிப்புகள்.
அசாதாரணமான இந்த ஆளுமையின் சித்திரத்தையும் வாழ்க்கைச் சம்பவங்களையும் உணர்வுபூர்வமாக, இயல்பான நடையில் தி.அ. ஸ்ரீனிவாஸன் தமிழாக்கித் தந்திருக்கிறார்.
‘கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்கின்றன.
கரிசல் வட்டார வழக்கை நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம்பெறச் செய்த முதல் தொகுப்பு இது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், மரங்கள், மாடுகள், ஆடுகள், கோழிகள், பறவைகள், பூக்கள், பூச்சிகளின் வழியாகப் புதுவகையான கதைகளைச் சொல்கிறார் கி.ரா.
இக்கதைகளில் வரும் பாத்திரங்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் தோல்விகளும் தியாகங்களும் அரசியலும் அன்றாடமும் யதார்த்தத்தைச் சித்திரிக்கின்றன.
இளம் படைப்பாளிகள் பலருக்கும் இன்றளவும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் அமைந்திருக்கும் தொகுப்பு இது.
கவிஞர் இசையின் சமீபத்தியக் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மிகுதியும் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. வாசகருக்கும் கவிதைக்குமான அந்தரங்க இடைவெளிக்குள் பயணிக்கும் பரவசத்தை இக்கட்டுரைகள் தருகின்றன.
பகட்டை மறுதலிக்கும் இசையின் உரைநடைக்குள் இயல்பாகவே எளிய ஒய்யாரம் புகுந்துகொள்கிறது. மொழியின் சிடுக்குகளில் சிக்கிக்கொள்ளாத அந்த நளினம் அவரது கவிதைகளைப் போன்றே கட்டுரைகளையும் கலையனுபவமாகப் பறந்தெழச் செய்கிறது.
இந்த நூலெங்கும் காற்றுக் குமிழிகளை ஊதியபடி ஓடும் ஒரு சிறுவனால், அதனுள் ஆயிரம் குட்டிப் பிரபஞ்சங்களை உருவாக்கிவிட முடிகிறது.
செந்தில்குமார் நடராஜன்
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்து நாவலைப் பகடியும் திட்பமும் அவலமும் காவியத்தன்மையும் கொண்டதாக மாற்றுகின்றன. தமிழில் வெளியாகும் அய்ஃபர் டுன்ஷின் முதல் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’. அவரது குறுநாவல் அஸீஸ் பே சம்பவம் காலச்சுவடு வெளியீடாக முன்னர் வெளிவந்துள்ளது.
-‘சத்திய சோதனை’யின் இந்த ஆய்வுப் பதிப்பின் பதிப்பாசிரியரான திரிதீப் சுஹ்ருத். காந்திய அறிஞர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாறை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர்.
சத்திய சோதனை நூலிலுள்ள பல்வேறு நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவல்கள், அவற்றின் பின்னணி சார்ந்த குறிப்புகள், குஜராத்தி மூலத்திற்கும் ஆங்கில மொழியாக்கத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் கொண்ட விரிவான பதிப்பு இது. குஜராத்தியில் காந்தி எழுதியதை, காந்தியின் மேற்பார்வையில் செய்யப்பட ஆங்கில மொழியாக்கத்துடன் ஒப்பிட்டு நோக்குகிறது என்ற வகையில் இந்த நூல் தனித்துவமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. காந்திக்கு வந்த கடிதங்களையும் தேவையான இடங்களில் அடிக்குறிப்பில் அளித்திருக்கிறார் திரிதீப் சுஹ்ருத்.
காந்தியின் தன்வரலாறுக்குத் தனித்த இலக்கிய மதிப்பும் இடமும் உண்டு. காந்தியை அவரது மனப் போராட்டங்களுடன் நமக்கு நெருக்கமாக அது அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய மொழியாக்கம் காந்தியை மேலும் நெருக்கமாக நமக்கு அறிமுகப்படுத்தும்.