Your cart is empty.
இதம் தந்த வரிகள்
-
To get 15.00% discount on All books 2025 Spend ₹1,000.00 more from All books 2025
-அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும்
நிலவெளி குறித்த உணர்வுடன் மேலும்
-கேள்வி-பதில். எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும்
ஒரு படைப்பு வடிவம மேலும்
-சில சமயம் நான் கண்ட உண்மையைக் கூறுவேன். நான் பெற்ற இன்பத்தை
உணர்த்துவேன். நான் விரும்பும மேலும்
-தமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன்
ஒப்பிட்டால் கவிதையியல் பற்ற மேலும்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி,
கல்லூரி மாணவர்களும மேலும்
-கோயில் என்றால் என்ன, இந்து மதத்தில் கோயில்களின் இடம் என்ன,
கும்பிடும் தெய்வங்கள் எத்தனை, மேலும்
-வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள்
இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்ன மேலும்
-பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும்
‘வெட்டுக்கிளிப் ப மேலும்
-ஓர் எழுத்தாளரை ஒரு வாசகர் இந்த அளவுக்கு நெருக்கமாகப் பின்தொடர
முடியுமா? அவரது எல்லாப் பட மேலும்
-எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா
இயற்பியல் துறையில் பேராசிரியராகப மேலும்
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின மேலும்
-இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு
வந்திருக்கவில்லை. போர் உச்சம் மேலும்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார் மேலும்
-தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும்
பனஞ்சிறகு விசிறியில் தவ்விப் ப மேலும்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்
-அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும்
நிலவெளி குறித்த உணர்வுடன் உருவாக்கியுள்ள ஒருத்தி திரைப்படம்
ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், நிமாய்கோஷின் பாதை தெரியுது
பார் . . . ஆகிய படங்களின் வரிசையில் வைத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு
முக்கியமான முயற்சி.
நல்ல இலக்கியப் படைப்பை படமாக்கினால் நல்ல சினிமாவாகவும் இருக்கும்
என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அம்ஷன் குமார் அதை சாதித்திருக்கிறார்.
ஜாதிப் பிரச்சினையைப் பேசும்
படங்களில், கதை மேல் ஜாதிக்காரரின் பார்வையிலேயே நகரும். இந்தப்
படத்தின் கதை தலித் பெண்ணின் பார்வையில் நகர்கிறது.
-கேள்வி-பதில். எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும்
ஒரு படைப்பு வடிவம். குமுதம் தீராநதி இதழுக்கு வாசகர்கள் கேட்ட
கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்களும் இங்கு
தொகுக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள்மீதான கவனம்
அதிகரித்திருப்பது, இயக்கங்களின் இன்றைய நிலை, ஹாலிவுட் நடிகர்
டென்சில் வாஷிங்டனின் படம், மதமாற்றத் தடைச் சட்டம், தலித் இலக்கியம்
எனப் பல விஷயங்கள் குறித்து வாசகர்களுடன் தீவிரமாக உரையாடல்
நிகழ்த்துகிறார் சு.ரா. வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று,
காசாரமான விவாதங்களை எழுப்பிய இந்தத் தொடர் இப்போது நூல் வடிவம்
பெறுகிறது.
-ஜி. நாகராஜனைச் சந்தித்துப் பழகத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தன்னைப்
பிரமிக்கவைத்த அவரது ஆளுமை பற்றிய, அவரது விசித்திரமான போக்குகள்
பற்றிய, அவரிடமிருந்த ‘அற்புதமானதும் அதிசயமானதுமான' ரகசிய உலகம்
பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளைப் பதிவுசெய்துள்ளார் சுந்தர ராமசாமி.
காலங்கள் செல்லச் செல்ல நாகராஜனின் கோலங்கள் நசியத் தொடங்கியதை -
ஹோட்டல் சர்வர்களே ஆச்சரியப்படும் விதத்தில் ‘எக்கச்சக்கமாக'ச்
சாப்பிட்டவர், பின்னாளில் ஒரு சின்ன லட்டு சாப்பிடவே சிரமப்படும் நிலைக்குத்
தன்னை ஆளாக்கிக்கொண்டதை – துக்கம் கசியும் மனத்துடன் இந்நூலில் சுந்தர
ராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்.
-கர்நாடக இசையுலகில் எம்.டி. ராமநாதன் ஒரு துருவ நட்சத்திரம். சங்கீத்ததால் அல்ல, சங்கீதத்துக்காக வாழ்ந்த நாதயோகி அவர். அவரது வாழ்வில் முக்கிய நிகழ்ச்சிகளைக் கவிதை வடிவில் முன்வைக்கும் இலக்கிய முயற்சி இந்த நீள் கவிதை. ஓர் இசைக் கலைஞரின் வாழ்வைப் பேசுபொருளாகக் கொண்ட ஆக்கம் ஒருவகையில் முன்னுதாரணமற்றது. பி. ரவிகுமார் மலையாளத்தில் எழுதிய கவிதையை அதன் உயிர்ப்பும் உணர்வு குன்றாமல் ‘எழுத்து’ காலக் கவிஞர் மா. தக்ஷிணாமூர்த்தி தமிழாக்கியுள்ளார். இலக்கிய வாசகருக்கு இது இனிய சங்கீதம். இசை ரசிகருக்கு நூதன வாசிப்பு அனுபவம்.
-கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இது. திலகர், மு. இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி சு. நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடிதங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை. பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் (1917) அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூலின் செப்பமான இரண்டாம் பதிப்பு இது.
-சில சமயம் நான் கண்ட உண்மையைக் கூறுவேன். நான் பெற்ற இன்பத்தை
உணர்த்துவேன். நான் விரும்பும் சீர்திருத்தத்தை வற்புறுத்துவேன். நான் அழிக்க
விரும்பும் தீமைகளைச் சாடுவேன். இத்தனையும் செய்யாவிட்டால் மன
உலகில் கூடச் சுதந்திர புருஷனாக இருக்க முடியாது. ஆகவே எழுதாமல்
இருக்க முடியாது என்ற காரணங்களை முன்னிட்டே நான் எழுதிவருகிறேன்.
-தமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன்
ஒப்பிட்டால் கவிதையியல் பற்றிய விமர்சனங்கள் குறைவு. குறிப்பாக ஒரு
மூத்த கவிஞரின் கவிதை பற்றிய தனிப்பட்ட ஆய்வு என்ற வகையில்
அமைந்தவை அதிலும் குறைவு
இந்த நூல் சுந்தர ராமசாமியின் அநேகமாக எல்லாக் கவிதைகளையும் குறித்துக்
கவனம் கொள்கிறது. அந்த வகையில் தமிழில் இது ஒரு முன் முயற்சி. சுந்தர
ராமசாமியின் ஒவ்வொரு கவிதை பற்றியும் தனது வாசிப்பனுவத்தை
ஆதாரமாகக்கொண்டு ராஜமார்த்தாண்டனால் பேச முடிகிறது என்பது கவிதை
அனுமதிக்கும் பெரும் வாய்ப்பு. வியப்பளிக்கிறது இந்த வாய்ப்பு.
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி,
கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல்
அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின்
தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல
என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த
பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை
மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது.
பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான
தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில்
தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
-கோயில் என்றால் என்ன, இந்து மதத்தில் கோயில்களின் இடம் என்ன,
கும்பிடும் தெய்வங்கள் எத்தனை, வரலாற்றில் கோயில்களின் இடம் என்ன,
விடுதலைக்குப் பின்னர் கோயில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை
என்னும் கேள்விகளை இந்த நூல் பரிசீலனை செய்கிறது. தமிழகக் கோயில்கள்
பற்றிய நூல்களில் முற்றிலும் மாறுபட்டது இந்நூல். கோயில் கட்டிடம்,
வரலாறு, சிற்பங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் கோயிலுக்கும்
சமூகத்திற்குமான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த உறவைச்
சமகாலப் பார்வையுடன் விவரிக்கிறது. கோயில் வழிபாடு சமகால அரசியலால்
பாதிக்கப் படுவதையும் நடுநிலையுடன் கூறுகிறது. நூலின் ஆசிரியர் உமா
சங்கரி தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி ஆய்விற்குச் செய்த (1976-83)
கட்டுரைகளின் மறுபரிசீலனை செய்யப்பட்ட சுருங்கிய வடிவம் இது.
-வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள்
இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்' எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம்
பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை 'முதிர்கண்ணன்கள்' எனலாமா?
அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம்.'
பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம்
பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது.
இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர்.
ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்.
-பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும்
‘வெட்டுக்கிளிப் பெண் - ஓர் அன்புப் பாடல்’ என்னும் நாவல் கற்பனை வெளியில்
உருக்கொள்கிறது. அசாத்தியமான புனைவு உருவகங்களின் வழியே சமகால
அரசியலைத் தீவிரமாகப் பேசுகிறது.
நாவலின் கதாபாத்திரங்களையும் சூழலையும் சமகால யதார்த்தத்துடன் புரிந்துகொள்ள
முடிகிறது. பசிக்கு மக்கள் வெட்டுக்கிளிகளை உண்கிறார்கள். பார்லி கஞ்சியைக்
குடிக்கிறார்கள். உணவிற்காகவும் நீருக்காகவும் உடல் பாகங்களையும் உடமைகளையும்
விற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் அதீதமான சுரண்டலால் இயற்கை
பொய்த்துப்போகிறது. வானம் பழுப்பு நிறமாகிவிடுகிறது. மரங்களே இல்லாமல்
போய்விடுகின்றன. எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில்,
எல்லையைக் கடக்க முற்படும் வெட்டுக்கிளிப் பெண்ணும் அவளின் அன்புப்
பாடலும்தான் இவற்றுக்கான தீர்வாக அமைகிறார்கள்.
அரசாங்க அடக்குமுறைக்கும் எல்லைப் பிரிவினைவாதத்திற்கும் எதிரான குரல் நாவல்
முழுவதும் எதிரொலிக்கிறது. உலக நாடுகளின் அரசியல் எப்படி இயங்குகிறது என்பதை
மெர்லிண்டா பாபிஸ் அசாத்தியமான புனைவு மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.
வெடி விபத்தொன்றில் ஒன்பது வயதில் மண்ணுக்குள் புதைந்துபோகும் அமிதேயா, பத்து
ஆண்டுகளுக்குப் பிறகு, நெற்றியில் உயிருடன் இருக்கும் வெட்டுக்கிளியோடு
உயிர்த்தெழுகிறாள். எல்லையை நோக்கிய அவளுடைய பயணத்தில், உயிர்
வாழ்வதற்கான அவள் தேடலில் அவளுடன் சேர்ந்து வாழ்க்கை குறித்த பல
கேள்விகளுக்கு நமக்கும் பதில் கிடைக்கிறது.
-உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்கள் தவிர சீன, மலேசிய, கம்போடிய ராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் கூடப் போற்றப்படுகிறான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இராமனின் பன்முகத் தோற்றங்களையும் அதையொட்டிய கதைகளையும் சடங்குகளையும் இந்நூலில் அ. கா. பெருமாள் சுவைபடக் கூறுகிறார்.
-ஓர் எழுத்தாளரை ஒரு வாசகர் இந்த அளவுக்கு நெருக்கமாகப் பின்தொடர
முடியுமா? அவரது எல்லாப் படைப்புகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் நுட்பமாகப்
படிக்க முடியுமா? படித்ததினின்றும் தனக்கான பார்வையை
உருவாக்கிக்கொண்டு அதைத் தெளிவாக முன்வைக்க முடியுமா? அந்த
எழுத்தாளரின் ஆக்கங்களில் உள்ள வகைமைகள், கூறுமுறைகள்,
நுணுக்கங்கள், கலைத்திறன், மொழித்திறன், பார்வைகள், இலக்கிய உத்திகள்
ஆகியவற்றைத் துல்லியமாக விளக்கிவிட முடியுமா?
மு. இராமனாதனின் 'இது முத்துலிங்கத்தின் நேரம்' என்னும் இந்த நூலைப்
படித்தால் மேலே உள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் 'ஆம்' என்று உறுதியாக
விடையளிக்க முடியும். முத்துலிங்கத்தின் எழுத்துலகம் மேற்பார்வைக்கு
எளிமையானதாக இருந்தாலும் உள்ளார்ந்த அடர்த்தியும் ஆழமும் கொண்டது.
அவற்றைத் துலக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகிறார் ஆசிரியர். ஓர்
எழுத்தாளருக்கு அவர் வாழும் காலத்திலேயே இப்படி ஒரு வாசகர் கிடைப்பது
அபூர்வமானது என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.
-எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா
இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய
கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு
வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே
புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும்
எதிர்கவிதைகளை உருவாக்கினார். தீவிரமான சொற்சிக்கனம் அமைந்த
இக்கவிதைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாயின.
எதிர்கவிதை எல்லாவிதமான கொள்கைப் பிடிவாதங்களுக்கும் எதிரானது
என்பது பர்ராவின் புரிதல். “ஒரேசமயத்தில் ஏற்புகளும் மறுப்புகளும்"
கலந்திருப்பதே எதிர்கவிஞரின் பாதை என்பது அவருக்கிருந்த தெளிவு.
பர்ராவின் பெரும் ரசிகரான பெருந்தேவி அவரது பல்வேறு தொகுப்புகளிலிருந்து
சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கவித்துவமும் தொனியும்
மாறாமல் தமிழாக்கியிருக்கிறார். தமிழில் பர்ராவையும் அவர் முன்னெடுத்த
எதிர்கவிதை அழகியலையும் சிறப்பாக அறிமுகப்படுத்தும் தொகுப்பு இது.
-அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினம், அண்மையில் உலகை உலுக்கிய
கொரோனாப் பெருந்தொற்று நோயின் கடந்த கால வடிவமான பிளேக் நோயைப்
பற்றிய புனைவாகக் கொள்ளலாம். கமுய் பிறந்த அல்ஜீரியாவில் ஓரான் என்னும்
ஊரில் இப்புதினத்தில் விவரிக்கப்படும் பிளேக் நோய் தொடர்பான சம்பவங்கள்
நடைபெறுகின்றன. 1940 களில் தாக்கியதாகச் சொல்லப்படும் அந்நோய் எத்தகைய
விளைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தின என்பதை அழகியலோடு காட்சிப்படுத்தி
இருக்கிறார் கமுய்.
வெறுக்கத்தக்க அம்சங்கள் தான் மனிதர்களிடம் அதிகமாக மண்டிக் கிடப்பதாக
நம்மில் பலருக்கும் ஆதங்கம் இருக்கும்.ஆனால்,ஆராதிக்கக்கூடிய எத்தனையோ
பண்புகள் மக்களிடம் உள்ளன என்பதை இப்புதினம் விளக்குகிறது. பெருந்தொற்று
என்பது ஓர் உருவகம்,ஒரு வடிவம்,ஒரு குறியீடு.போர்,அடக்குமுறை போன்ற
எதுவெல்லாம் மனிதன் இறக்க காரணமாகிறதோ அவையெல்லாம்
பெருந்தொற்று தான். வாழ்க்கை என்பது அபத்தம் என்று கூறி விரக்தி
அடையாமல் சவால்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதன்மூலம்
வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைத் தேடலாம் என்பதே கமுய் தரும் செய்தி.
-இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு
வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள்
சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும்
நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும்
இந்த நாவலை அந்தச் சமயத்தில் எழுதுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.
அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமாதானத் தூதுக்
குழுக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றோடு இலங்கை அரசாங்கம்
பாராளுமன்றம் ஆகியவற்றின் குறைபாடுகளையும் செயற்பாடுகளையும்
ஊழல்களையும் இந்த நாவல் வெளிப்படையாக விமர்சித்திருப்பதால் அதிகார
வர்க்கத்திலிருந்தும் இந்த நாவலுக்கும் நாவலாசிரியைக்கும் பலத்த எதிர்ப்புக்
கிளம்பியிருந்தது.
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில்
மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில்
பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது.
மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலைப்பூட்டுகிறது.
தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள்
மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய
சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன்
வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும்
வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும்
திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின்
வசியத்திற்குக் காரணமா?
இக்கேள்விகளுக்கு விடைகாணும் தேடலை மேற்கொள்ளும் இந்த நூல்,
இந்தியாவின் தேசியக் காவியங்களில் ஒன்றாக விளங்குவது ஏன் என்னும்
கேள்வியையும் ஆராய்கிறது. மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, உருது,
குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த நூல்
தற்போது தமிழுக்கு வருகிறது. காவிய உணர்வும் அறிவார்த்தமான அலசலும்
கொண்ட இந்த நூலை அதன் தன்மை மாறாமல் தமிழாக்கியிருக்கிறார்
அரவிந்தன்.
-தகிக்கும் வெக்கை கொண்ட இராப்பொழுதின் அடர் இருளை அசைக்கும்
பனஞ்சிறகு விசிறியில் தவ்விப் புரளும் மின் காற்றின் குளிர்ச்சியையும்
எளிமையையும் கொண்டவை பெருமாள்முருகனின் கட்டுரைகள். ஈரம் ததும்பும்
மொழியின் ஊடாக வேறுபட்ட கருப்பொருள்களைக் கண்டெடுத்த இவை
பாராட்டுகளோடு எதிரிகளையும் நிரம்ப சம்பாதித்தவை. மேற்கோள்களையும்
புள்ளி விவரங்களையும் நிராகரிக்கும் அதே வேளையில் சிறுகதைக்குரிய
முனைப்பும் கவிதைத் தருணங்களும் கைவரப்பெற்றவை.
இட்டேரித் தடத்தின் அழகை ஏளனம் செய்யும் வாழ்க்கையைப் படைப்புகளில்
வன்மத்தோடு எதிர்கொண்ட பெருமாள்முருகன் நெடுஞ்சாலை மனிதர்களின்
நகாசுகளை இக்கட்டுரைகளில் ஏளனத்தோடு கடந்து செல்கிறார். இளங்காலை
அதிவேக ரயில் பயணத்தின் சிலிர்ப்பை நல்கும் பெருமாள்முருகனின்
இன்னொரு முகமும் நன்றாகத் தான் இருக்கிறது.
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும்
கதைகள் இவை. தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில்
கதைகளைச் சொல்ல முடியும் என்பதை உணர்த்தும் பல கதைகள்
இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்க வாழ்வையும்
தழுவியதாக விரியும் இந்தப் புனைவு வெளி, நிலம், பண்பாடு ஆகிய
எல்லைகளைக் கடந்த தளத்தில் மனித வாழ்வின் கூறுகளை மிகுந்த
அக்கறையுடனும் தீராத வியப்புடனும் திறந்த மனத்துடனும் ஆராய்கின்றன.
கவித்துவம் ததும்பும் சு.ரா.வின் மொழிநடை இறுக்கம் தளர்ந்த தீவிரத்துடன்
வாசகருடன் நட்பார்ந்த தொனியில் உரையாடுகிறது. சொல்லும்
மொழியைவிடவும் சொல்லாமல் உணர்த்தும் மௌனத்தின் வலிமையை
அதிகம் நம்பும் சு.ரா., தன் புனைவு வெளியினுள் வாசகருக்கான வெளியையும்
அதன் மூலம் திறந்துவைக்கிறார்.