Your cart is empty.
உடைந்த குடை
உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங் களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல் இது. மிலன் குந்தேராவின் புகழ்பெற்ற நாவலான ‘The Unbearable Lightness of Being’ இன் நார்வேஜிய வடிவம் என்று சொல்லக் கூடிய இந்நாவலில் எலியாஸ் ருக்லா என்ற மையப் பாத்திரத்தின் மூலமாக நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் மனிதன் ஒவ்வொருவனும் தனது அக உலகில் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலமாக தனது அடையாளத்தை தேடித்தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக்கொள்வதையும், விரத்தியும் உறவுகளோடு பாராட்டும் போலி அன்பும் மட்டுமே மிச்சமிருப்பதைக் கண்டுகொள்வதையும் தாக் ஸுல்ஸ்தாத் சித்தரிக்கிறார். பெரிதும் அகவயப்பட்ட இந்நாவல் நார்வேஜியக் கலாசாரப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையுற்றிருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக நாவலாகவே இருக்கிறது.