Your cart is empty.
எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நினைவலைகள் (இ-புத்தகம்)
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
To get 15.00% discount on All books 2025 Spend ₹1,000.00 more from All books 2025
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் க மேலும்
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொ மேலும்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக மேலும்
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்த மேலும்
-பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எ மேலும்
-வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகம மேலும்
-சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். மனிதர்களுக்குத் தீங்கு செ மேலும்
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன் மேலும்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆக மேலும்
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவ மேலும்
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமு மேலும்
1856. அவத் ராஜ்ஜியத்தின் தலைநகரமான லக்னோ கிழக்கிந்திய கம்பெனியின் பேராசைக் கரங்களுக்கு இலக்காகிறத மேலும்
-சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வ மேலும்
-தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வா மேலும்
-‘கிருஷ்ணப் பருந்து’ நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத மேலும்
இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் ம மேலும்
-19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞா மேலும்
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவ மேலும்
-சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்க மேலும்
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.
சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்)
"அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!''
பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா
இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.
அடூர் கோபாலகிருஷ்ணன்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது.
பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
-இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின் முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த நாவல்.
கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல பெண்களை இல்லறத்துள்ளும் துறவறம் பேணும் நிலையை நோக்கி வலிந்து தள்ளியிருப்பதை மறுக்கவியலாது. அதைப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக மாற்றும் யதார்த்தங்களும் அரங்கேறின. இன்றைய பெண்ணின் திண்ணம், சடங்குகளைத் தாண்டி வாழ்வியலை அதன் நுட்பத்துடன் அணுக கற்றுத்தந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்துப் பெண்ணையும் அதன் பிற்காலத்துப் பெண்களையும் இந்த நூற்றாண்டின் பெண்களையும் பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. அந்தந்தக் காலகட்டத்துப் பெண்களின் இணைத்தன்மையையும் முரண்களையும் இப்புதினம் கையாள்கிறது. வெவ்வேறு நாடுகள், நகரங்கள், கலாச்சாரங்கள், கடிதங்கள் என்றவாறு செல்லும் இந்தக் கதை பெண்கள் எவ்வாறு அவற்றின் பொருட்டு உருமாற்றம் பெறுகிறார்கள் என்பதையும் உணர்த்த முயல்கிறது.
-பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் பல்துறை சார்ந்த அறிவும் தகவல் செறிவும் உரையில் இயல்பாக வெளிப்படுகின்றன. கம்பன், அண்ணங்கராச்சாரியர், திருமூலர், பி.ஸ்ரீ., பாரதி, ஷேக்ஸ்பியர், ஷெல் சில்வர்ஸ்டைன் போன்றோரின் கருத்துகளும் வரிகளும் உரைக்குக் கூடுதல் வண்ணங்களைச் சேர்க்கின்றன.
வைணவக் கோட்பாடு, பக்தி ரசம், இலக்கிய நயம், மானுட நேயம் முதலானவையும் உரையில் பொருத்தமான விதத்தில் இடம்பெறுகின்றன.
திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் பற்றிய அருமையான தகவல்களும் ரசனையுடன் கூடிய விளக்கங்களும் இந்த உரையில் இருக்கின்றன. சொல்லுக்குச் சொல் உரை எழுதும் முறையினின்று வேறுபட்டுச் சுவாரஸ்யமான இலக்கிய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டதைப் போன்ற உணர்வைத் தரக்கூடிய உரை இது.
-வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், துக்ளக் சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உணர்வுப்பூர்வமான, மிகையற்ற சொல்முறையில் வெளிப்பட்டுள்ளன.
-சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவர். வனங்களையும் மனங்களையும் மிக நேர்த்தியாகச் சித்தரிப்பவர். அவரது படைப்புகளை வேட்டை இலக்கியம் என்று வகைப்படுத்தலாம். வேட்டை குறைவாகவும் இலக்கியம் அதிகமாகவும் உள்ள நூல் என்பதே ‘எனது இந்தியா’வின் சிறப்பு.
Jim Corbett, an adventurer with a gentle heart, never killed an animal that did not harm human livings. A matured writer, describes both the jungles as well as minds. His writings may be classified as jungle literature – less of jungle and more literature.
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில். இயற்கைச் சூழலில் வாழும் மிருகங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
1958இல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பல திருத்தங்கள், குறிப்புகளுடன் மறுபிரசுரம் பெறுகிறது.
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில் மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில் பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது.
மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலைப்பூட்டுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள் மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன் வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும் வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும் திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின் வசியத்திற்குக் காரணமா?
இக்கேள்விகளுக்கு விடைகாணும் தேடலை மேற்கொள்ளும் இந்த நூல், இந்தியாவின் தேசியக் காவியங்களில் ஒன்றாக விளங்குவது ஏன் என்னும் கேள்வியையும் ஆராய்கிறது. மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, உருது, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த நூல் தற்போது தமிழுக்கு வருகிறது. காவிய உணர்வும் அறிவார்த்தமான அலசலும் கொண்ட இந்த நூலை அதன் தன்மை மாறாமல் தமிழாக்கியிருக்கிறார் அரவிந்தன்.
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.
இவருடைய கதை உலகம் பதற்றமும் வேதனையும் கூடியது. அன்றாடத்தின் சுமைகளைத் தன்னுள் கொண்டு இயங்குவது. தமிழ்நாட்டில் உதிரித் தொழிலாளிகளாகத் திரியும் இலங்கைத் தமிழர்கள், இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்கள் ஆகியோரின் அன்றாடத்தின் தவிப்புகளை, நிராசைகளைப் பதிவு செய்திருக்கிறார்.
இலங்கைத் தமிழ் அகதி முகாம்களின் வெளியே தெரியாத மற்றொரு முகத்தை இக்கதைகளில் காணலாம்.
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்டு விதமான எளிமை உண்டு. ஒன்று குழந்தை மனத்தின் எளிமை. பிறகு அறிவு சேர்ந்து, எளிமை இழந்து தவித்து, அவஸ்தை கொண்டு அலைக்கழிந்து, பின் மனம் கடந்து மலரும் புதிய எளிமை. இரண்டும் ஒன்றல்ல. குழந்தையின் எளிமை தன்னிருப்பு அறியாதது. மனம் கடந்த எளிமை தன்னிருப்பின் ஊற்றுக்கண்ணில் தற்கணம் நிலைப்பது. இந்த இரண்டாவது எளிமையின் பார்வை அங்கங்கே வெளிச்சம் காட்டுவது குவளைக்கண்ணன் கவிதைகளின் சிறப்பு.
1856. அவத் ராஜ்ஜியத்தின் தலைநகரமான லக்னோ கிழக்கிந்திய கம்பெனியின் பேராசைக் கரங்களுக்கு இலக்காகிறது; நவாப் கல்கத்தாவில் கம்பெனியின் உயரதிகாரிகளைச் சந்திக்கக் கோரிக்கை மனுவோடு முகாமிட்டிருக்கிறார்; அவரின் தாயாரோ லண்டனில் விக்டோரியா மகாராணியின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்; இந்தச் சூழலில் நவாப்பின் இரண்டாம் மனைவியான, அரச குடும்பத்தில் பிறக்காத, அரசி என்ற அந்தஸ்து அளிக்கப்படாமல் காமக் கிழத்திகளில் ஒருத்தியாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் பேகம் அஸ்ரத் மகல் கம்பெனிப் படையின் அத்துமீறல்களை எதிர்கொண்டு தனது இளம்வயது மகனுக்கு முடிசூட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டி லக்னோவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி வென்றதா? லக்னோ காப்பாற்றப்பட்டதா? இந்தக் காலகட்டச் சம்பவங்களை, நவாப் குடும்பத்தின் நம்பிக்கைக்குக்குரியவளும் அவரது கருவூலத்தின் பாதுகாவலாளியும் தாய் வழியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவளும் போராளியுமான அமா என்ற இளம்பெண்ணின் வாழ்வனுபவங்களாக நாவல் விரிக்கிறது. போர்ச்சூழலின் வக்கிரமான புற அழிபாடுகளைப் பற்றிய விவரணைகள் ஒரு போர்க்களத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன; மனித உணர்வுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றிற்குப் போர் விடுக்கும் சவாலும் நெருக்கடியும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதமும் காத்திரமான பாத்திரங்களின் மூலம் நாவலில் நுட்பமாக வெளிப்படுகின்றன.
-சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய முன்னோடி என்று காட்டக்கூடிய எழுத்தாளர் எவரும் அவருக்கு முந்தைய தலைமுறையில் இல்லை. ஆனால் அவரது சமகாலத்தின் எல்லா உன்னதமான எழுத்தாளரிடமும் காணப்பட்ட ஒற்றுமைகள் சார்வாகனிடமும் காணக்கிடைக்கின்றன. முதலில் சொல்லப்பட வேண்டிய குணாம்சம் கதைகளில் வெளிப்படும் தன்முனைப்பற்ற தன்மை. அடுத்ததாக மொழித்தேர்ச்சியின் விளைவாக அமைந்த பிழையற்ற செறிவான உரைநடை; பொருத்தமான சொற்தேர்வு.
மிகச் செழுமையான தமிழ் சார்வாகனுடையது.
Saarvagan was a unique writer beyond comparison with any of his contemporaries. His style was unprecedented. In an enriched language, with careful diction, his prose had qualities of a classic. He was an expert in language as well as storytelling. The defining attributes of great writers of the time are embraced by Saarvagan too, especially a narrative that doesn’t emphasize on self. This posthumous edition introduces a writer of times past, and the times to a new reader. A treasure in itself.
-தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன.
ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன.
The expressions of the mind blossom when they turn into poems. The single dimensional poems expresses the other dimensions too.
-‘கிருஷ்ணப் பருந்து’ நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்... இந்த நாவலில் சிந்தனையின் நிழல் சற்று அழுத்தமாகவே விழுந்திருக்கிறது.
நாவலை நாம் படிக்கையில் அதன் மேல் தளம் ஒரு திசையில் நகர்வதைப் பார்க்கும் நாம், அதன் அடித்தளம் அதன் எதிர்த்திசையில் நகர்வதை உணரலாம். ஒரே சமயத்தில் இவ்வித இரண்டு இயக்கங்கள் சலிப்பதைச் செய்து காட்டுவது ஒரு ஆற்றல் என்றே நான் கருதுகிறேன். இங்குதான் கலாபூர்வமான வாழ்க்கைப் பிரதிபலிப்பே அதன் விமர்சனமாக மாறுகிறது.
இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.
இதில் உள்ள கவிதைகளைக் குடும்பக் கவிதைகள் என்று சொல்லலாம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோர் கவிதைகளில் வருகிறார்கள். ஆனால் இவற்றைக் குடும்பக் கவிதைகள் என்று அழைத்துப்பார்ப்பது இதனால் அல்ல. சஹானாவின் குடும்பம் சற்றே பெரிய, சமயங்களில் மிகப்பெரிய குடும்பமாக விரிகிறது. அதில் பூனையும் தெய்வமும் மழையும் மலையும் காற்றும் நிலவும் கடலும் அண்டமும் எனப் பலவும் நிரம்பி நிற்கின்றன. யாவற்றுக்குமிடையே நேயத்தின் பாடலை இசைக்க முயல்கிறார் கவிஞர்.
-19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யா வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த ‘அகிலத்திரட்டு அம்மானை’ முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில் மூலப்பதிப்புகளுடன் ஒப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியர் அ.கா. பெருமாள்.
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்.
-சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் பெருகும் காமத்தின் பித்துநிலை, கருணையற்று நிகழ்த்தப்படும் துரோகங்கள், இருபால் உள்ளங்களின் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, அகம் குலைக்கும் புறக்கணிப்புகள் என மனித மனத்தின் இருண்மை கூடிய பிரதேசங்களில், வழித்தடங்களில் பயணிக்கின்றன இக்கதைகள். எனினும் அன்பின் பிரியத்தின் ஒளிமிகுந்த விகசிப்பையும் இவற்றில் ஆங்காங்கே காண்கிறோம். சூழலின் நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் நெருக்கடிகளில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உறவுச்சூதில் வெட்டியெறியப்பட்டவர்களாகவும் நினைவழிந்து அகாலத்திற்குள் சென்று மறையும் மனிதர்களின் காலடித் தடங்கள் பதிந்த இக்கதைகளில் இழைவுகளும் சிடுக்குகளும் ஊடுபாவிய அகவுலகின் நுட்பமான புள்ளிகள் தொட்டுக் காட்டப்படுகின்றன.