Your cart is empty.
அந்தரம் (இ-புத்தகம்)
-அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் … மேலும்
-அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில் விரிகிறது.
அலைதலின் வேதனை, அடைக்கலம் (?) தருபவர்கள் கையளிக்கும் அவமானத்தின் வலி, இரண்டு வேளைச் சோற்றுக்கும் வந்த பஞ்சம், இவ்வளவுக்கு இடையிலும் விலக மறுக்கும் காமத்தின் வெம்மை என இந்த நாவலின் பாத்திரங்கள் அனுபவிக்கும் துயரங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அகதிகளின் துயரங்களைச் சொல்லும் பத்திநாதன் அவர்களுடைய எத்துவாளித் தனங்களையும் சொல்ல மறுப்பதில்லை.
நாவலில் வரும் ஆணும் பெண்ணும் புறவுலக இருப்பிடங்களுக்கு மட்டுமின்றிச் சொந்த வாழ்க்கையில் கண்டடைய வேண்டிய இடத்திற்காகவும் அலைவுறுகிறார்கள். இந்த அலைதலைச் சொல்லும் பத்திநாதன், பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் சுரண்டி ஏமாற்றி வாழும் யதார்த்தத்தையும் அம்பலப்படுத்துகிறார்.
இலங்கைத் தமிழ் அகதி முகாம் குறித்த அழுத்தமான சித்திரத்தை இந்நாவல் தருகிறது.
ISBN : 9788196086237
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அர்ச்சுனன் தபசு (இ-புத்தகம்)
-கருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு மேலும்
அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது (இ-புத்தகம்)
-கருத்துரிமை சார்ந்து பெருமாள்முருகன் எழுதிய இருபத்தேழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த ஆறு மேலும்













