-நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளுமையான கு. அழகிரிசாமி, அப்போது எழுத்தாளராக மலராத நண்பர் கி. ராஜநாராயணனுக்கு எழுதிய 99 கடிதங்களின் தொகுப்பு ‘என் உயிர்த்தோழனே’. அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதிய கடிதமும் அதில் உண்டு.
இசை, இலக்கியம், பத்திரிகை, சென்னை வாழ்க்கை ஆகிய அனுபவங்களால் நிறைந்தவை இக்கடிதங்கள். எளிமையும் சுவாரஸ்யமும் கடிதங்களில் இழையோடுகின்றன.
அட்டையில் உள்ள படம் அழகிரிசாமி, ராஜநாராயணனுக்கு அனுப்பிய சிறப்பு அஞ்சல் அட்டை ஒன்றில் உள்ள படம்.
அதில் “நம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய கொள்கை இதுவே” எனும் வரியை அழகிரிசாமி எழுதியுள்ளார்.