Your cart is empty.
புதுமைப்பித்தன் களஞ்சியம்(இ-புத்தகம்)
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவருடைய சமகாலத்தினர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், நினைவுரைகள் முதலானவற்றைக் கொண்ட பெருந்தொகுப்பு இக்களஞ்சியம். புதிய … மேலும்
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவருடைய சமகாலத்தினர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், நினைவுரைகள் முதலானவற்றைக் கொண்ட பெருந்தொகுப்பு இக்களஞ்சியம். புதிய செய்திகளும் வாசிப்புச் சுவாரசியமும் சுவையும் பொங்கி வழியும் கட்டுரைகள் இதில் அடங்கும்.
புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் அவருடைய காலத்திலும் அவருடைய மறைவுக்குப் பின்னரும் அவரை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை இத்தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும்போது வியப்பும் மலைப்பும் மேலெழுகின்றன. பாரதியைத் தவிர்த்து வேறு எந்த நவீனத் தமிழ்ப் பண்பாட்டு ஆளுமைக்கும் இவ்வளவு மதிப்பீடுகள் வந்ததில்லை. புதுமைப்பித்தனையும் அவருடைய படைப்புகளையும் தமிழுலகம் மிகச் சிறப்பாகவே அடையாளம் கண்டது என்பதற்கு இக்களஞ்சியம் சான்றாகும். புதுமைப்பித்தனின் இடம் தமிழ் இலக்கிய உலகத்தில் எவ்வாறு நிலைபேறடைந்தது என்பதையும் இக்களஞ்சியத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ISBN : 9789355239976
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
புதுமைப்பித்தன் களஞ்சியம்(இ-புத்தகம்)
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவ மேலும்
பேசத் துணிந்த எழுத்துக்கள் (பெருமாள்முருகன் படைப்புலகம்) (இபுத்தகம்)
எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை ப மேலும்













