Your cart is empty.
இது மர்ஜானியின் கதை. அவள் வாழ்ந்த கதை. அவள் கனவு. உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருப்பவளின் கனவு. இந்தக் கதையினூடேயும் கனவினூடேயும் இயங்குகிறது ஸர்மிளா ஸெய்யித்தின் இந்த நாவல்.
அய்லி சொல்வது தன்னுடைய கதையை மட்டுமல்ல. அவள் வாயிலாக மர்ஜானி, ஜெய்நூரின் கதைகளையும். இவை அவளுடைய நடைமுறையிலிருந்தும் எண்ணத்திலிருந்தும் உருவானவை. கூடவே அவளுடைய உணர்விலிருந்தும் உயிர்ப்பிலிருந்தும் வரலாற்றுப் பெண்களான அர்வாவும் அஸ்மாவும் சுலைகாவும் பல்கீஸ்ராணியும் எழுந்து சமகால மாந்தராகிறார்கள்.
பிணிக்கும் மீட்புக்கும் இடையிலான அனுபவத்தைச் சொல்கிறது கதை. அதே சமயம் இம்மைக்கும் மறுமைக்குமான காலத்திலும் களத்திலும் நிகழ்கிறது. மீட்பின் மன்றாடுதலாகவும் போராட்டமாகவும் நாவலுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. அந்தக் குரலின் தூல வடிவம் அய்லி.
ISBN : 9789355235985
PAGES : 208