Your cart is empty.
திரிவேணி சங்கமம் - தேர்ந்தெடுத்த நெடுங்கதைகள் (இ-புத்தகம்)
ஆசி கந்தராஜாவின் தேர்ந்தெடுத்த நெடுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். எத்தனை நாடுகள் சுற்றினாலும் அவரது கால்கள் ஈழத்து மண்ணில் நிலைகொண்டிருப்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. ஆசி கந்தராஜாவின் … மேலும்
ஆசி கந்தராஜாவின் தேர்ந்தெடுத்த நெடுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். எத்தனை நாடுகள் சுற்றினாலும் அவரது கால்கள் ஈழத்து மண்ணில் நிலைகொண்டிருப்பதை இந்தக் கதைகள் காட்டுகின்றன. ஆசி கந்தராஜாவின் மொழியும் சரளமாகக் கதை சொல்லும் முறையும் வாசிப்புக்கு உகந்தவையாக இருக்கின்றன. வளமாக வாழும் ஈழத்தவர், துயருறும் ஈழத்தவர் ஆகியோர்மீதான பார்வைகளும் இந்தக் கதைகளில் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு கதையையும் மேலோட்டமாகப் பார்க்கும்போது அலங்காரங்களின் மினுமினுப்புத் தெரியும். ஆழமாகப் பார்க்கும்போது கூடுதலான அடுக்குகளைக் கண்டுணர முடியும். ஆசி கந்தராஜாவின் ஆகிவந்த பேசுபொருள்கள், மொழி, கதையாடல் பாணி, பாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்தக் கதைகளை அவருடைய புனைவுலகத்தைக் காட்டும் கதைகள் என்று சொல்லலாம்.
ISBN : 9789355238665
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அரூப நெருப்பு (இ-புத்தகம்)
-எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு.
வாழ்வி மேலும்













