Your cart is empty.
வல்லுறவு நாம் எதைப் பேச வேண்டும் (இபுத்தகம்)
வல்லுறவு வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா? · வல்லுறவு இறப்பைவிட மோசமானதா? … மேலும்
வல்லுறவு வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா? · வல்லுறவு இறப்பைவிட மோசமானதா? வல்லுறவுக்கும் ஆசைக்கும் என்ன தொடர்பு? · வல்லுறவு செய்யப்படுவது யார்? செய்வது யார்? · ஒப்புதல் என்றால் என்ன? · வல்லுறவுக்கு ஆளானவர்கள் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் மீண்டும் பெறுவது எப்படி? இப்படிப் பல முக்கியமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு விடையளிக்கிறது இந்த நூல். கூட்டு வல்லுறவுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டுவந்து அதைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கிய முதல் பெண் சொஹைலா அப்துலலி. முப்பது ஆண்டுகளாக எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் ஆலோசகராகவும் செயலாற்றிவரும் அவர், நாம் வல்லுறவைப் பற்றிப் பேசத் தவறிய பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைக்கிறார். நமது பேச்சுக்கள், மௌனங்கள், ஆழமான அச்சங்கள், நாம் தவிர்க்கும் கேள்விகள் என அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வல்லுறவைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தி உரையாடத் தூண்டும் கருவி இந்நூல்.
ISBN : 9789355239587
PAGES : 0













