Your cart is empty.
யயாதி (இ-புத்தகம்)
-தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் … மேலும்
-தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவன் கருத்தில் கொள்கிறான். வேறு எதையுமே அவன் பொருட்படுத்தவில்லை. ஏறிட்டுப் பார்க்கவும் அவன் விரும்பவில்லை. விஸ்வரூபம் கொண்ட அவனுடைய விழைவு ஒருநாளும் திரும்பப் பெற முடியாத ஓர் உயிரைப் பலி வாங்கிய பிறகே அடங்கி ஓய்கிறது. துயர் பொருந்திய அக்கணத்தில்தான் யயாதியுடைய அறிவுக் கண்கள் திறக்கின்றன. அடங்காத விழைவுக்கும் அறிவுக்கும் இடையிலான இணைப்புகளிலும் முரண்களிலும் பேருருக் கொண்டு நிற்கிறான் யயாதி.
ISBN : 9789355237538
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இலக்கியமும் திறனாய்வும் (இ-புத்தகம்)
-மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் மேலும்
இக்கடல் இச்சுவை (இ-புத்தகம்)
-கோபம், ஆதங்கம், ஆற்றாமை போன்ற வலிமையான உணர்ச்சிகளின் வீச்சு கச்சிதமான படிமச்சிதறல்களாகத் தெறிக மேலும்














