Your cart is empty.
அசகவ தாளம் (இ-புத்தகம்)
-இன்று வாழ்வை முழுநேரமும் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கும் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை. சில இடங்களில் படிமங்களாக, உருவங்களாக, சில இடங்களில் அகச்சிக்கல்களாக, … மேலும்
-இன்று வாழ்வை முழுநேரமும் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கும் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை. சில இடங்களில் படிமங்களாக, உருவங்களாக, சில இடங்களில் அகச்சிக்கல்களாக, இன்னும் சில இடங்களில் சிந்தனைகளாகத் தேங்கிவிட்ட ஞாபகங்களை அன்றாட வாழ்க்கையில் வைத்து அர்த்தம் தேடும் முயற்சியை பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகள் கச்சிதமாகவே செய்கின்றன. தன்னிச்சையாகத் தோன்றும் சிறுசிறு வியப்புகளையும் நெகிழ்வான, எளிமையான மொழியின் மூலம் கூறிச்செல்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். இவற்றைக் குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் காணவிரும்பும் ஒருவனின் படைப்புகள் என்று குறிப்பிடலாம்.
ISBN : 9789355231635
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இன்னொருமுறை சந்திக்க வரும்போது (இ-புத்தகம்)
-உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெற மேலும்
இந்திரா காந்தி (இ-புத்தகம்)
-“என் வீட்டின் ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்ப மேலும்














