Your cart is empty.
அத்தைக்கு மரணமில்லை
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: தி.அ. ஸ்ரீனிவாஸன் |
வகைமைகள்: மொழிபெயர்ப்பு குறுநாவல் |
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?
இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல்.
ISBN : 9789355231260
SIZE : 13.8 X 0.6 X 21.5 cm
WEIGHT : 0.0 grams
டி.என். ரஞ்சித்குமார்
23 Sep 2025
சுனில் கிருஷ்ணன்
20 Mar 2025
‘அத்தைக்கு மரணமில்லை’ நாவல் பற்றிய பார்வை
“அத்தைக்கு மரணமில்லை இந்தியத்தன்மை கொண்ட வங்காளக் குறுநாவல்… சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. ஸ்ரீனிவாசனுக்கு இடமுண்டு. மொழியாக்கமும் சரி, மொழியாக்க தேர்வுகளும் சரி தொடர்ந்து சிறப்பாக உள்ளன.”
முழுக் கட்டுரையையும் வாசிக்க:
https://www.suneelkrishnan.in/2025/03/blog-post.html?m=1...
வினோத் ராஜ்
2 Oct 2025
சீர்ஷேந்து முகோபாத்யாயின் ’அத்தைக்கு மரணமில்லை’ – குறுநாவல் மதிப்புரை …இக்குறுநாவல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்களின் கதையையும் காலத்தின் போக்கில் மாற்றமடையும் அவர்களின் - குடும்பத்தின் - நிலையையும் எடுத்துப் பேசுகிறது. மேலும், ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் மனங்களில் நிகழ்ந்திருக்கும் வேறுபாட்டையும் மாற்றத்தையும் அவர்களுக்குள் நிறைந்திருக்கும் ஆசைகள், நிராசைகள், ஏக்கங்கள், கனவுகள், வேட்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் வழியாக எடுத்துரைக்கிறது… ..நூறு பக்கங்களுக்குள்ளாக, மூன்று தலைமுறை பெண்களின் மனங்களையும் வாழ்க்கையையும் மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கும் இக்குறுநாவலை ஒரே அமர்வில் வாசித்து முடிக்கும் வகையில், மிக உயிரோட்டமாக எழுதியிருக்கிறார் சீர்ஷேந்து. அதை மிகச் சீரான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் தி. அ. ஸ்ரீனிவாஸன்…
நன்றி:வினோத் ராஜ் (முகநூல் பதிவிலிருந்து) முழுப்பதிவுக்கு:
https://www.facebook.com/photo/?fbid=122179719914534986&set=a.122112241058534986




