Your cart is empty.
-ராமாயணம் ஒரே வடிவம் உடைய கதை அல்ல. உலகில் எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் ராமாயண வடிவங்கள் உள்ளன. செவ்வியல் மரபில் மட்டுமின்றி நாட்டார் மரபிலும் ராமாயணங்கள் உள்ளன. இத்தகைய பலவிதமான ராமாயணங்களில் ஒன்றுதான் அத்யாத்ம ராமாயணம். ராமனின் கதையைப் பரமசிவன் பார்வதிக்குக் கூறும் வடிவில் அமைந்ததே அத்யாத்ம ராமாயணம். இது வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த ராமாயணத்தில் ராமன் மனிதப் பிறவி எடுத்தாலும் அவன் தெய்வப் பிறவி என்பதை அவனைச் சுற்றிலும் உள்ளவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அத்யாத்ம ராமாயணத்தின் சுருக்கமான உரைநடை வடிவம்தான் இந்த நூல். நாட்டார் வழக்காற்றியல், பண்டைய இலக்கியங்கள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளரான அ.கா. பெருமாள் இந்தநூலை எழுதியுள்ளார். ராமாயணத்தை மிகச் சுருக்கமாக இன்றைய தலைமுறையினருக்கு வழங்கும் இந்த நூல் ராமாயணத்தில் பொதுவாக அறியப்படாத பல கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.
ISBN : 978-81-19034-30-7
SIZE : 14.0 X 0.5 X 21.4 cm
WEIGHT : 0.16 grams