Your cart is empty.


காஞ்சி (இ-புத்தகம்)
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின. இப்பொழுது … மேலும்
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின. இப்பொழுது ‘காஞ்சி’.
அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை உறைவில் ஆழ்த்திவிடக்கூடிய வரிகள் திடீரென்று எதிர்ப்பட்டு நம்மை நகரவிடாமல் செய்கின்றன.
வெவ்வேறு உலகங்களை நோக்கி விரிகின்ற சேரனுக்கு, ஒரு நொடி வாழ்வுக்கும் மறு நொடி சாவுக்குமான இரண்டு நொடிகளுக்கு இடையில் தோன்றலும், தோன்றிப் பின் மறைவும், அழிவும் ஆக்கமும், போரும், பின்னும் போரும், உறவும் பிரிவும், களவும் காதலும், காமமும் ஊடலுமாய் எல்லாமே கவிதைகள்.
இவை சேரனின் தீர்க்கமான குரல்கள். முகத்தில் அறையுமாப்போல் இந்த உலகத்திற்கு முன் அவர் நிறைவேற்றும் பிரகடனங்கள்.
பாடித் தீராத வாழ்வு . . .
- றஷ்மி
ISBN : 9789355235558
PAGES : 203