ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு …
மேலும்
ஒரு தனி நபர் தன்னுடைய பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை அறிவது என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அறிவதுதான். அந்த அறிதலுக்கான கண்ணைத் திறக்க உதவுவதுதான் ஒரு வழிகாட்டியின் முன் உள்ள சவால். கவிஞராகவும் மானுடத்தின் மீது அக்கறை கொண்ட உளவியல் ஆலோசகராகவும் ஆனந்த் எதிர்கொண்டிருப்பது இந்தச் சவாலைத்தான். அதைப் பொறுப்புணர்வுடனும் பக்குவத்துடனும் மனித மனம் குறித்த ஆழமான புரிந்துணர்வுடனும் எதிர்கொண்டிருப்பதன் சாட்சியமே இந்த நூல்.