சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ்.மாதவன். நவீனத்துவத்தை அடியொற்றி இயங்கியவர். எனினும் அதன் பொதுப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட …
மேலும்
சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ்.மாதவன். நவீனத்துவத்தை அடியொற்றி இயங்கியவர். எனினும் அதன் பொதுப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிறுகதைகள் மூலம் தன்னை நிறுவிக்கொண்டவர். மாதவனின் கதைகள் வெறும் புனைவுகளல்ல; வரலாற்று இடையீடுகள். அல்லது வரலாற்றை ஓர் எழுத்தாளனின் நோக்கில் பரிசீலனை செய்யும் எத்தனங்கள். புராணிகங்களிலும் பழைய சரித்திரத்திலும் நிகழ்கால வரலாற்றிலும் பங்கேற்கும் பாத்திரங்களை இன்றைய பின்புலத்தில் விசாரிப்பவை அல்லது சமகால உலகத்துடன் அந்தப் பாத்திரங்களை எதிர்கொள்ள வைப்பவை மாதவனின் கதைகள். சரியாகச் சொன்னால் வரலாறு இல்லாதவர்களும் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்களும் நடத்தும் சரித்திர விசாரணையே இந்தக் கதைகள். தன்னுடைய சிறுதைகளில் தனக்குப் பிடித்தவையாக என்.எஸ். மாதவனே தேர்ந்தெடுத்த பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.
என்.எஸ். மாதவன்
என்.எஸ். மாதவன் (பி. 1948) கொச்சியில் பிறந்தவர். கொச்சி ஸ்ரீ ராமவர்மா உயர்நிலைப் பள்ளி, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி, திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் மாவட்டத் துணை ஆட்சியர், ஆட்சியர் முதலான பதவிகளில் பணியாற்றி அம்மாநில உள்ளாட்சித் துறைச் செயலரானார். பீகாரில் வசிக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் நாவல், நாடகம், விமர்சனம் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு நூலும் வெளிவந்துள்ளன. ‘லந்தன் பத்தேரியிலே லுத்தினியகள்’ (டச்சு பீரங்கித் தளத்தில் பாசுரங்கள்) நாவலின் ஆங்கில மொழியாக்கத்துக்கு (மொழியாக்கம் - ராஜேஷ் ராஜமோகன்) வோடஃபோன் கிராஸ்வேர்ட் புத்தக விருது வழங்கப்பட்டது. ‘பெருமரங்கள் விழும்போது’ சிறுகதை ‘காயாதரண்’ என்ற பெயரில் சசிகுமாரால் இந்தியில் திரைப்படமாக்கப்பட்டது. மனைவி ஷீலா ரெட்டி அவுட்லுக் ஆங்கில வார இதழின் புத்தகப் பகுதி ஆசிரியர். மகள் மீனாட்சி ரெட்டி மாதவன் புகழ்பெற்ற வலைப்பதிவர், நாவலாசிரியர்.
ISBN : 9789381969601
SIZE : 13.8 X 0.9 X 21.4 cm
WEIGHT : 231.0 grams
This is a collection of short stories selected by the author. Widely considered classics of Malayalam literature.