Your cart is empty.
சங்ககாலத் தமிழர் உணவு
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் … மேலும்
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது.
தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்களில் 81 இடங்களில் விருந்து என்ற சொல் வருகிறது. உலகளாவிய ‘உணவு விலக்கு’ தமிழர்களிடமும் உண்டு; சைவ/அசைவ உணவு வகைகளைச் சமைக்க தனித் தனிச் சட்டிகளைப் பயன்படுத்தினர். இப்படியாகப் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார் பக்தவத்சல பாரதி. சங்கப் பண்பாட்டின் வரலாற்றை அறிவதில் இந்நூலின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
ISBN : 9789391093228
PAGES : 168