Your cart is empty.
சிக்மண்ட் ஃபிராய்டு
சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர்; பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்; தனிமனித உளவியலையும் தாண்டி, … மேலும்
சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர்; பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்; தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர். அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத செய்திகள் பல: இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள்; அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் கடுமையாகச் சாடி எழுதியவர்; அவர் பெயர் இரண்டுமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, ஆனாலும் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை; இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் கருணைக்கொலை வேண்டித் தனது 83ஆவது அகவையில் உயிர் நீத்தார்; அவர் முன்வைத்த பல கருத்துகள் இன்று வேறுவடிவங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூல் அவர் முன்வைத்த கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிக் கூற முற்படுகிறது; இன்றைய அறிவியல் தளத்தில் நின்று மதிப்பீடு செய்கிறது; மனித குலத்துக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது.
ISBN : 9788194302780
SIZE : 13.9 X 1.4 X 21.4 cm
WEIGHT : 300.0 grams
A book introducing the work of Sigmund Freud. Written by Dr. M. S. Thambiraja, a Psychologist who has worked as lecturer in psychology in the Burmingham university. Freud who lived till 83 before dying of cancer is the face of psychology. He wrote extensively about personal psychology, religion, human culture, art and civilisation. He was an atheist, his name was nominated twice to the nobel prize are details that aren’t widely known still. Apart from introducing his contributions, the books also introduces criticisms on them from contemporary psychology.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்
முதற்கால்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத் மேலும்





