Your cart is empty.
கொத்து 5 ( ஷா இன் ஷா, ‘ஷ்’ இன் ஒலி , வீழ்ந்தவர்கள்
----நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்பட மேலும்
-படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த மேலும்
-சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படை மேலும்
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் க மேலும்
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொ மேலும்
----நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
ஈழப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட ஆறு கதைகளைக் கொண்ட இத் தொகுப்பின் ஆதாரமாக அமைந்திருப்பவை போரும் புலம்பெயர்வும். இந்த வகைமையில் பல நூறு கதைகள் வெளிவந்திருப்பினும் நட்சத்திரனின் கதையுலகம், சொல்முறையிலும் புனைவுக் கட்டமைப்பிலும் தனித்துவம் கொண்டது.
இக்கதைகள் லட்சியங்களின் மூலம் கட்டமைக்கப்படும் வரலாற்றையும் பிம்பங்களையும் கலைக்க முயற்சிப்பவை; கூடவே மாற்று வரலாற்றையும் கட்டமைப்பவை. சமகால அரசியலை எளிய மொழியில் பகடியாகவும் எள்ளலுடனும் சித்தரிப்பவை.
அமைப்புகள்மீதான அவநம்பிக்கை, தோல்வி, ஏமாற்றம், விரக்தி, கைவிடப்படுதல், உணர்வழிவு போன்ற பல்வேறு தளங்களில் நகர்ந்தாலும் இறுதியில் இணக்கத்தையே இக்கதைகள் இறைஞ்சுகின்றன.
-இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன். மானுட வடிவம் எடுத்த நிலையிலும் பெரும்பாலும் தெய்வமாகவே செயல்பட்டவன். எனினும் மானுடப் பண்புகளான காதல், நட்பு முதலானவற்றை வெளிப்படுத்தியவன். இவற்றையும் தாண்டி, தத்துவம், இசை எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவன்.
வண்ணமயமான பன்முக ஆளுமையாக விளங்கும் கிருஷ்ணனை மையமாகக் கொண்டு இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் இது. கிருஷ்ணனைச் சமகாலப் பின்னணியில் வைத்துக் காணும் அணுகுமுறையே இந்த நாவலின் தனித்தன்மை.
-திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலைவடிவம் எப்படி பைய்ட் பைப்பரைப் போல எல்லோரையும் குழந்தைகளாக்கித் தன் பின்னால் இழுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர் ஒரு வரலாற்றாய்வாளருக்குரிய முறையில் விளக்குகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் சற்று அதிகமான கால இடைவெளியில் அந்தக் கலை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்களைத் தொகுக்கும் பாஸ்கரனின் கட்டுரைகள் நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கிய அவரது மொழிநடை இக்கட்டுரைகளுக்குப் புனைவின் சாயல்களை அளிப்பதால் அவை நம் வாசிப்பனுபவத்தை மேலான தளத்துக்கு உயர்த்துகின்றன.
Theodore Baskaran is one of Tamil leading voices of environmental conservation. 'Rest on the silverscreen' is a collection of articles about Cinema by Theodore Baskaran. His views on cinema are nuanced and deep. He looks into the relationship between contemporary life and cinema, its gaps and connections from a sociological perspective. Also like a historian, he wonders how a new technology made everyone run behind it like children. In a time period, just over a century, cinema had large impacts on us as a society. Baskaran's article weave together the story of how it happened, focusing on aspects we often overlook, written with the charm of a fiction writer.
-படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சிகள் மிகவும் குறைவாகவும் போலித்தனமான பாவனைகள் அதிகமாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. திரைப்படங்களில் வெளிப்படும் சமூகப் பார்வையில் தெரியும் போதாமைகளையும் சாதி உணர்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழலில் சற்றேனும் நம்பிக்கை தரும் படைப்பாளிகளையும் கவனப்படுத்துகின்றன.
-தொண்ணூறுகளின் இறுதியிலும் புத்தாயிரத்தின் முதல் இரு பதிற்றாண்டுகளிலும் நவீன தமிழில் வலுவாக எழுந்த ‘பெண் கவிதை’யில் புதிய திசை வழியைக் காட்டும் தடப் பதிவு இந்தத் தொகுப்பு. பொன்முகலியின் இந்த மூன்றாவது தொகுப்பு அவரது அடையாளத்துக்கு வலிமையையும் பொலிவையும் சேர்க்கிறது.
இன்றைய தலைமுறை ‘பெண் கவிஞர்’களில் பொன்முகலி தன் இடத்தைத் தானே கண்டடைந்தவர். தனக்கே தனக்கான கவிமொழியை உருவாக்கிக்கொண்டவர். ஒழுக்கத்தின் பெயரால் சுமத்தப்பட்ட விதிகளைக் கேள்விக்குட்படுத்திப் பேசாப் பொருளில் பேசத் துணிந்தவர்.
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் காதலிலும் காமத்திலும் பெண் கொள்ளும் தற்களிப்பைப் பகிரங்கமாக விவரிக்கின்றன. பெண்ணுடல்மீது இதுவரையும் ஆண் கொண்டாடி வந்த திளைப்பை எள்ளி நகைக்கின்றன. பெண் சுயத்தின் ஆன்மாவைத் திறந்து காட்டுகின்றன.
-வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது.
இந்தக் கதைத்துண்டுகளின் தளம் பரந்தது. காலனியாதிக்கம், பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் பன்மைய அழிவு, கொள்ளைநோய்களின் தோற்றம், அவற்றுக்கான மருத்துவம், அதன் பின்னாலுள்ள அரசியல், மதங்களால் பீடிக்கப்பட்ட சமூகத்தின் கையறுநிலை என்று உலகளாவிய பிரச்சினைகளிலிருந்து தன் கதைக்கான துண்டுகளைத் தெரிவு செய்கிறது இக்குறுநாவல். அத்தனை துண்டுகளும் பிரதிபலிப்பது இவையனைத்தும் நிறைந்த நிஜத்தையும், அதைக் கண்டும் காணாமல் கடந்துபோகும் நம் வாழ்வின் நிதர்சனத்தையும்.
பொய்யுரு நாம் பார்க்கத் தவறும் பிரச்சினைகளைப் பரப்பிவைத்து நமது பார்வையை மாற்ற முயல்கிறது.
ஜானகிராமனின் இசைப் பார்வையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். ஒன்று இசை உலக மனிதர்களைப் பற்றிய விமர்சனம். இதைப் பெரும்பாலும் கிண்டலும் நையாண்டியும் கலந்த நகைச்சுவை உணர்வோடு விஸ்தரிப்பார். அந்த விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அடுத்து, இசை உலகத்துடன் தொடர்புகொண்ட மனிதர் களைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள். இவையும் பெரிதாக மாறவில்லை.
ஜானகிராமன் இசையின் நுணுக்கங்களுக்குள் அதிகமாகப் போவதில்லை. எல்லாம் அனுபவம்தான். தான் கேட்ட இசையை அவர் விவரிக்கும்போது அந்த இலக்கிய நயமும் அழகியலும் நமக்கு அந்த இசையைக் கேட்ட முழு அனுபவத்தை அளிக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தின் காவிரிக் கரைக்கு நம்மை அழைத்துச் சென்று நல்ல காப்பியைக் கையில் கொடுத்து, பிலஹரியின் மேல் ஷட்ஜத்தில் லயித்துக்கொள்ளலாம் என்கிறார் தி. ஜானகிராமன்.
-1970களின் தொடக்கத்திலிருந்து எழுதி வரும் வண்ணநிலவனின் புதிய சிறுகதைத் தொகுப்பு இந்த நூல்.
சாதாரண மனிதர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை இலக்கியமாக மாற்றும் கலையில் தேர்ந்தவர் வண்ணநிலவன். தன்னிடமிருக்கும் அனைத்தையும் இழந்துவிட்ட பிறகும் சகமனிதனைப் போற்றுவதற்கான அன்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் மனிதர்களே வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள். இவருடைய ஆரம்பகாலக் கதைகளில் ஒலித்த மென்மையான குரலும் உணர்ச்சிவசப்படாத யதார்த்தப் பார்வையும் இத்தொகுப்பிலும் காணப்படுகின்றன.
இதில் இடம்பெறும் 11 கதைகளும் வேறுவேறு காலங்களிலும் இடங்களிலும் நிகழ்கின்றன. மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான மனநிலையை உருவாக்கும் சூழலும் புறவுலகை ஒரு சாட்சியாக நின்றுபார்க்கும் மனோபாவமும் கூடிய இந்தக் கதைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை. கட்டபொம்மன், மேனகை ஆகிய பாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் புதிய பார்வைகளையும் திறப்புகளையும் தருகின்றன.
-சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துக்கள் நமக்கு அவசியமாக இருக்கின்றன. அந்த வகையில் சினிமாவை எளிமையாகவும் ஆழமாகவும் சமகாலப் பிரபல தமிழ், ஹாலிவுட் படங்களின் உதாரணங்களோடு சினிமா பார்வையாளனுக்கு விளக்கும் வகையில் இரா. பிரபாகர் இந்நூலை எழுதியிருக்கிறார். முப்பது ஆண்டுகளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் பிரபாகரனின் இந்நூல் சினிமாவை ஒரு கலையாவும் தொழில்நுட்பமாகவும் விளங்கிக்கொள்வதற்கான கையேடாகத் திகழ்கிறது.
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.
சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்)
"அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!''
பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா
இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.
அடூர் கோபாலகிருஷ்ணன்