Your cart is empty.
சந்தி
ஒரு தலித் சிறுவனுக்கு அமையும் வாழ்க்கை முறை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. பல வகைகளிலும் சவால்கள் நிறைந்த சூழலில் அவன் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதைக் காட்டும் நாவல் இது.
வளரும் பருவத்தில் சாதியச் சூழல் சுமத்தும் நெருக்கடிகளை அந்தச் சிறுவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அனுபவங்கள் சார்ந்த நுட்பமான சித்தரிப்புகளால் ஆனது இந்த நாவல். எழுபதுகளில் இருந்த வாழ்க்கை முறையை அதன் அசலான நிறத்துடன் தன் எளிய சொற்களால் விவரித்துச் சிறந்த படைப்பனுபவத்தைத் தருகிறார் ஸ்ரீதர கணேசன்.