Your cart is empty.
எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நினைவலைகள் (இ-புத்தகம்)
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் க மேலும்
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொ மேலும்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக மேலும்
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்த மேலும்
-பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எ மேலும்
-வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகம மேலும்
-சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். மனிதர்களுக்குத் தீங்கு செ மேலும்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆக மேலும்
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவ மேலும்
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமு மேலும்
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.
சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்)
"அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!''
பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா
இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.
அடூர் கோபாலகிருஷ்ணன்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது.
பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
-இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின் முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த நாவல்.
கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல பெண்களை இல்லறத்துள்ளும் துறவறம் பேணும் நிலையை நோக்கி வலிந்து தள்ளியிருப்பதை மறுக்கவியலாது. அதைப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக மாற்றும் யதார்த்தங்களும் அரங்கேறின. இன்றைய பெண்ணின் திண்ணம், சடங்குகளைத் தாண்டி வாழ்வியலை அதன் நுட்பத்துடன் அணுக கற்றுத்தந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்துப் பெண்ணையும் அதன் பிற்காலத்துப் பெண்களையும் இந்த நூற்றாண்டின் பெண்களையும் பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. அந்தந்தக் காலகட்டத்துப் பெண்களின் இணைத்தன்மையையும் முரண்களையும் இப்புதினம் கையாள்கிறது. வெவ்வேறு நாடுகள், நகரங்கள், கலாச்சாரங்கள், கடிதங்கள் என்றவாறு செல்லும் இந்தக் கதை பெண்கள் எவ்வாறு அவற்றின் பொருட்டு உருமாற்றம் பெறுகிறார்கள் என்பதையும் உணர்த்த முயல்கிறது.
-பெரும்பாலான தமிழர்களின் வாழ்வில் மார்கழி மாதத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பது ஆண்டாள் எழுதிய திருப்பாவை. பக்தியில் கரைந்து, கேட்பவரையும் கரையவைக்கும் இந்த முப்பது பாடல்களும் மனதைக் கொள்ளைகொள்ளும் கவித்துவமான ஆக்கங்கள். இந்தப் பாடல்களுக்கான எளிய உரையைச் சமகாலத் தமிழ் நடையில் வழங்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் பல்துறை சார்ந்த அறிவும் தகவல் செறிவும் உரையில் இயல்பாக வெளிப்படுகின்றன. கம்பன், அண்ணங்கராச்சாரியர், திருமூலர், பி.ஸ்ரீ., பாரதி, ஷேக்ஸ்பியர், ஷெல் சில்வர்ஸ்டைன் போன்றோரின் கருத்துகளும் வரிகளும் உரைக்குக் கூடுதல் வண்ணங்களைச் சேர்க்கின்றன.
வைணவக் கோட்பாடு, பக்தி ரசம், இலக்கிய நயம், மானுட நேயம் முதலானவையும் உரையில் பொருத்தமான விதத்தில் இடம்பெறுகின்றன.
திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் பற்றிய அருமையான தகவல்களும் ரசனையுடன் கூடிய விளக்கங்களும் இந்த உரையில் இருக்கின்றன. சொல்லுக்குச் சொல் உரை எழுதும் முறையினின்று வேறுபட்டுச் சுவாரஸ்யமான இலக்கிய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டதைப் போன்ற உணர்வைத் தரக்கூடிய உரை இது.
-வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், துக்ளக் சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உணர்வுப்பூர்வமான, மிகையற்ற சொல்முறையில் வெளிப்பட்டுள்ளன.
-சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவர். வனங்களையும் மனங்களையும் மிக நேர்த்தியாகச் சித்தரிப்பவர். அவரது படைப்புகளை வேட்டை இலக்கியம் என்று வகைப்படுத்தலாம். வேட்டை குறைவாகவும் இலக்கியம் அதிகமாகவும் உள்ள நூல் என்பதே ‘எனது இந்தியா’வின் சிறப்பு.
Jim Corbett, an adventurer with a gentle heart, never killed an animal that did not harm human livings. A matured writer, describes both the jungles as well as minds. His writings may be classified as jungle literature – less of jungle and more literature.
-புலிகளின் வாழ்க்கை, அவை வேட்டையாடும் விதங்கள், மனிதர்களை ஏன் அவை கொல்லத் துணிகின்றன என்பன போன்ற ஆச்சரியமான செய்திகளை நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஜிம் கார்பெட். காடு பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் நிறைய விவரங்கள் இடம்பெற்றுள்ளன இந்த நூலில். இயற்கைச் சூழலில் வாழும் மிருகங்களைப் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
1958இல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பல திருத்தங்கள், குறிப்புகளுடன் மறுபிரசுரம் பெறுகிறது.
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப் பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில் மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில் பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது.
மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலைப்பூட்டுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள் மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன் வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும் வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும் திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின் வசியத்திற்குக் காரணமா?
இக்கேள்விகளுக்கு விடைகாணும் தேடலை மேற்கொள்ளும் இந்த நூல், இந்தியாவின் தேசியக் காவியங்களில் ஒன்றாக விளங்குவது ஏன் என்னும் கேள்வியையும் ஆராய்கிறது. மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, உருது, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த நூல் தற்போது தமிழுக்கு வருகிறது. காவிய உணர்வும் அறிவார்த்தமான அலசலும் கொண்ட இந்த நூலை அதன் தன்மை மாறாமல் தமிழாக்கியிருக்கிறார் அரவிந்தன்.
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.
இவருடைய கதை உலகம் பதற்றமும் வேதனையும் கூடியது. அன்றாடத்தின் சுமைகளைத் தன்னுள் கொண்டு இயங்குவது. தமிழ்நாட்டில் உதிரித் தொழிலாளிகளாகத் திரியும் இலங்கைத் தமிழர்கள், இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்கள் ஆகியோரின் அன்றாடத்தின் தவிப்புகளை, நிராசைகளைப் பதிவு செய்திருக்கிறார்.
இலங்கைத் தமிழ் அகதி முகாம்களின் வெளியே தெரியாத மற்றொரு முகத்தை இக்கதைகளில் காணலாம்.
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்டு விதமான எளிமை உண்டு. ஒன்று குழந்தை மனத்தின் எளிமை. பிறகு அறிவு சேர்ந்து, எளிமை இழந்து தவித்து, அவஸ்தை கொண்டு அலைக்கழிந்து, பின் மனம் கடந்து மலரும் புதிய எளிமை. இரண்டும் ஒன்றல்ல. குழந்தையின் எளிமை தன்னிருப்பு அறியாதது. மனம் கடந்த எளிமை தன்னிருப்பின் ஊற்றுக்கண்ணில் தற்கணம் நிலைப்பது. இந்த இரண்டாவது எளிமையின் பார்வை அங்கங்கே வெளிச்சம் காட்டுவது குவளைக்கண்ணன் கவிதைகளின் சிறப்பு.