Your cart is empty.

அக்கை பத்மசாலி
பிறப்பு: 1987
திருநர் உரிமை ஆர்வலர், எழுத்தாளர், பாடகி, கலைஞர், பேச்சாளர். பால்புதுமையினரின் உரிமைகளுக்கான ஆதரவாளர்; கொள்கை மாற்றங்களுக்காக வாதிடுபவர். கர்நாடக அரசின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான ராஜ்யோத்சவ பிரசாஸ்தியைப் பெற்றிருக்கிறார். இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகத்திலிருந்து, அமைதி மற்றும் கல்விக்கான மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். மனித உரிமைகள் அமைப்பான ‘ஒண்டெடே’வின் நிறுவனர். தன்பாலீர்ப்பு உறவைக் குற்றப்படுத்திய இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஐ எதிர்க்கும் முன்னணிக் குரல்களில் இவரும் ஒருவர். திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, அதற்கு முந்தைய 2018, 2019ஆம் ஆண்டுகளின் சட்டமுன்வரைவுகள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்.