Your cart is empty.

ஆல்டஸ் ஹக்ஸ்லி
பிறப்பு: 1894--1963
ஆல்டஸ் லியோனார்ட் ஹக்ஸ்லி இங்கிலாந்தில் கோடல்மிங்க் என்ற சிற்றூரில் பிறந்தார். இவருடைய குடும்பத்தினர் பல்வேறு துறைகளில் வல்லுநர்களாகப் புகழ்பெற்றிருந்தவர்கள். இவரும் மிகச்சிறந்த தத்துவவியலாளர், கட்டுரையாளர், கவிஞர். ஐம்பதுக்கும் அதிகமாக நூல்களை எழுதியவர். கீழைத்தேயத் தத்துவ மரபில் ஆர்வம் கொண்டவர். இந்தியாவுக்கு வந்து ராமகிருஷ்ண மடத்தில் தங்கித் தியானம் பயின்றவர்.
அவருடைய ‘Brave New World’ எதிர்காலத்தைப் பற்றிய துர்க்கற்பனை நாவல். இது வெளிவந்த காலத்தில் பலத்த எதிர்ப்பையும் ஆதரவையும் ஒரு சேரச் சந்தித்தது. பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்நாவல் இன்றளவும் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.