Your cart is empty.
செழியன்
பிறப்பு: 1972
சிவகங்கையில் பிறந்த செழியன் இப்போது சென்னையில் வசிக்கிறார். கட்டடப் பொறியியல் படித்தவர். ஹார்மோனியம் சிறுகதைக்காக கதா விருதும் ‘தமிழ்ச் சிறுகதைகளில் காட்சிப் படிமங்கள்’ என்னும் தலைப்பில் செய்த ஆய்வுக்காக மத்திய அரசின் இளநிலை ஆய்வு நல்கை (Junior Fellowship 2004-2006) பெற்றவர். திரைப்பட ஒளிப்பதிவாளர், ‘டுலெட்’ திரைப்படத்தின் இயக்குநர். ஒளிப்பதிவுக்காகச் சர்வதேச விருதுகளும் (BFI London, MIFF Italy) இயக்கத்திற்காகத் தேசிய விருதும் (2018) பெற்றவர். The Film School என்னும் திரைப்படப் பள்ளியை நிறுவித் தமிழில் சுதந்திர சினிமாவுக்கான முன்னெடுப்புகளை வழிநடத்துகிறார். ‘பதேர் பாஞ்சாலி’ – அகாந்தக் (சத்யஜித் ராயின் முதல், கடைசித் திரைக்கதைகளின் மொழிபெயர்ப்பு), ‘வந்த நாள் முதல்’ (கவிதையும் நிழற்படங்களும்), ‘உலக சினிமா’, ‘பேசும் படம்’, ‘முகங்களின் திரைப்படம்’, ‘ஒளியில் எழுதுதல்’, ‘டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும்’, ‘த மியூசிக் ஸ்கூல்’ (மேற்கத்திய இசைக் குறிப்புகள் குறித்த பத்து நூல்கள்) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
மின்னஞ்சல்: chezhian6@gmail.com