Your cart is empty.
டாக்டர் வி. சந்திரசேகர ராவ்
பிறப்பு: 1959
பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தார். 1990இல் இவரின் முதல் கதை ‘நைட் டுயூட்டி’ வெளிவந்தது. ‘ஜீவனி’, ‘லெனின் ப்ளேஸ்’, ‘மாயலாந்தரு’, ‘துரோகவிருக்ஷம்’ ஆகிய கதைத் தொகுதிகளையும் ‘ஐது ஹம்ஸலு’, ‘ஆகுபச்சனி தேசம்’, ‘நல்லமிரியம் செட்டு’ ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். 2014இல் விசாலாந்திரா பிரசுராலயத்தார் இவரின் 31 கதைகளைத் தேர்ந்தெடுத்து வானொலி நாடகமாக்கி வெளியிட்டனர்.
‘ஐது ஹம்ஸலு’ நாவலுக்கு 1999ஆம் ஆண்டு ஆட்டா விருது (அமெரிக்க தெலுங்கு சங்கம்) கிடைத்தது. ‘ஆகுபச்சனி தேசம்’ சதுர நாவல் போட்டியில் விருதுபெற்றது. ‘நல்லமிரியம் செட்டு’ (கருமிளகுக் கொடி) நாவல் நவீன நாவல் போட்டியில் வெற்றிபெற்று விருது பெற்றது. 1999இல் ‘பூ...’ கதைக்கு தனா விருது கிடைத்தது. இவரின் கதைகள் ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவர் ஐஆர்எஸ் முடித்துப் பணியில் இருந்தவர்.