Your cart is empty.
இஸ்மாயில் கதாரே
பிறப்பு: (பி. 1936)
அல்பேனிய நாட்டுப் புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், திரைக்கதையாசிரியர், நாடக ஆசிரியர். மேன் புக்கர் சர்வதேச விருது உள்ளிட்ட பல விருதுகளைத் தன் ஆக்கங்களுக்காகப் பெற்றிருப்பவர். 15 வருடங்களாக நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர். கட்சி வேறுபாடின்றி அல்பேனியாவின் அரசியல் தலைவராகப் பொறுப்பேற்று அதை வழிநடத்திச் செல்லப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டவர். அல்பேனியக் கம்யூனிச அடக்குமுறைகளிலிருந்தும்
தணிக்கைகளிலிருந்தும் தப்புவதற்குத் தொன்மங்களையும் நாட்டார் கதைகளையும் உருவகக் கதைகளையும் புராணங்களையும் நீதிக்கதைகளையும் வீரக்கதைகளையும் தன் ஆக்கங்களில் உருவகங்களாய்ப்
பயன்படுத்திக்கொண்டதோடு தன்னையும் தன் சொந்த நகரமான டிரானாவிலிருந்து பாரீஸுக்கு நாடுகடத்திக்கொண்டவர். அல்பேனியாவில் கதாரேயின் ஒரு நூலாவது இல்லாத வீட்டைப் பார்ப்பது அரிது என்கிறது 'தி நியூயார்க் டைம்ஸ்'.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
முறிந்த ஏப்ரல்
எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மேலும்