Your cart is empty.
கலாநிதி க. சொக்கலிங்கம் (சொக்கன்)
பிறப்பு: 1930-2004
யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் 02.06.1930இல் பிறந்தவர். மாணவப் பருவத்தில் ஆரம்பமான இவரது எழுத்துலகப் பயணம், 10.12.2004 அன்று இவர் இறக்கும்வரை தொடர்ந்தது.
ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், கதையாசிரியர், கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர். பத்திரிகையாசிரியர், பாடநூலாசிரியர், சமயச் சொற்பொழிவாளர், நாடகாசிரியர், நாடகநெறியாளர் எனப் பன்முகங்கொண்ட இவரது வாழ்க்கை தன் வரலாற்று நூலாக வெளிவருகிறது.