Your cart is empty.

குந்தவை
பிறப்பு: 1941
இயற்பெயர் இராசரத்தினம் சடாட்சரதேவி. யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். 1963இல் ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாக வெளியான ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ எனும் கதைமூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானவர்.
ஆரம்பக் கல்வியை யாழ் தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர். புத்தளத்தில் ஆசிரியராகப் பணியாற்றிப் பின்னர் யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் பணியாற்றி 1990ஆம் ஆண்டு விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வுபெற்றவர்.
குந்தவையின் ‘பெயர்வு’ என்ற சிறுகதை ஏ.ஜே. கனகரட்னாவினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது; இச்சிறுகதை இலண்டனில் பாலேந்திராவினால் நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. ‘பாதுகை’ என்ற சிறுகதை இலங்கையில் மதிசுதாவினால் குறும்படமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
‘ஆறாத காயங்கள்’ (2016), ‘யோகம் இருக்கிறது’ (2012) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.
எழுத்துப் பணிக்காக 2008இல் ‘வடமாகாண ஆளுநர் விருது’ பெற்றவர்.