Your cart is empty.
மெர்லிண்டா பாபிஸ்
பிறப்பு: 1959
மூன்று மொழிகளில் பன்முக இலக்கிய வகைமைகளில் எழுதக்கூடிய, விருதுபெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகள் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ்,
அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளன. அவர் தனது நாடகப் பிரதிகளைப் பல்வேறு சர்வதேச அரங்குகளில் அரங்கேற்றியிருக்கிறார். "எழுதுவது என்பது அருள் போன்றது. அகத்தூண்டுதல் அடையும் ஒரு தருணத்தில், கடும் துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதாக
ஆக்கிக்கொள்ள முடியும் என்றும் அநீதியைப் புரட்டிப்போட்டுவிட முடியும் என்றும் நம்புகிறோம்; காரணம், அந்த உணர்ச்சிகளை நம்மால் வர்ணித்துவிட இயலும் என்பதால்தான். அத்துடன்... நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால். நமது மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கலாம். அந்த மகிழ்ச்சியைச் சேமித்து வைத்து, கடினமான தருணங்களில் நம்மை ஆறுதல்படுத்திக்கொள்ள அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று அவர் தன் படைப்புச் செயல்பாட்டை விளக்குகிறார்.
