Your cart is empty.
செ. முஹம்மது யூனூஸ்
பிறப்பு: 1924
முஹம்மது யூனூஸ் பர்மாவில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவரது பள்ளிக்கல்வி தடைப்பட்டது. தமிழ், ஆங்கிலம், பர்மீயம் ஆகிய மொழிகளைச் சொந்த முயற்சியில் கற்றார். நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக்-இல் கிளைச் செயலாளராகப் பணியாற்றினார். அகில பர்மா தமிழர் சங்கம் முதலான அமைப்புகளில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். பர்மாவிலிருந்து வெளியான தொண்டன் பத்திரிகையில் பத்திகள் எழுதியிருக்கிறார். ரங்கூனில் பயண முகவாண்மையகம்
நடத்தி வந்தார். பர்மாவில் இந்தியர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்கள் மிகுந்தபோது, 1966இல் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தார். அது முதல் ஹாங்காங்கில் வசித்து வருகிறார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், இந்திய முஸ்லிம் சங்கம் முதலான அமைப்புகளை நிறுவியவர்களுள் ஒருவர். ஹாங்காங் இந்திய சமூகத்தின் மூத்த பிரமுகர். பெற்றோர்: ச.நெ. செல்வக்கனி ராவுத்தர் -முஹம்மது பாத்திமா;
மனைவி: பாத்திமுத்து ஜொஹரா; மகன்: நாஸீர். மகள்கள்: ஸபியா, கரிமா