Your cart is empty.
இஹ்சான் அப்துல் குத்தூஸ்
பிறப்பு: 1919
இஹ்சான் அப்துல் குத்தூஸ் (பி. 1919-1990)
இஹ்சான் அப்துல் குத்தூஸ் 1919 ஜனவரி ஒன்றாம் நாளில் கெய்ரோவில் பிறந்தார். எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், வழக்கறிஞர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு.
தந்தை, முஹம்மது அப்துல் குத்தூஸ். பொறியாளர், கவிஞர், நடிகர், நாடகக் கலைஞர். தாயார்: பாத்திமா ரோஸ் அல் யூசுப். தாயாரின் பூர்வீகம் லெபனான். பத்திரிகையாளர், நாடகக் கலைஞர். இஹ்சான் அப்துல் குத்தூஸ் 1942இல் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.
அரசியல் தொடர்பான தனது எழுத்துக்களால் பலமுறை கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக பலஸ்தீன் போரில் பயன்படுத்தப்பட்ட மோசமான ஆயுதங்களைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து எழுதினார். இதனால் 1952 ஜுலை மூன்றாம் நாளில் நடைபெற்ற எகிப்துப் புரட்சிக்குப் பிறகு இரண்டுமுறை கைதுசெய்யப்பட்டு ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் ஏராளமான நாவல்களையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. எகிப்து அரசின் இலக்கிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் 1990 ஜனவரி 11இல் கெய்ரோவில் மறைந்தார்.