Your cart is empty.
பெருங்கட்டூர் பொ. ராஜகோபால்
பிறப்பு: 1953
பெருங்கட்டூர் பொ. ராஜகோபால் (பி. 1953)
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெருங்கட்டூர் கிராமத்தில் பாரம்பரியக் கட்டைக்கூத்துக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் ச. பொன்னுசாமி, நளாயினி மற்றும் கிருஷ்ணர் வேடங்கள் கட்டிப் புதிய பரிமாணத்துடன் ஆடும் ஆட்டத்திற்காகப் புகழ்பெற்றவர். தாத்தா சந்திரன், தாத்தாவின் அப்பா சுப்பன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் முழுநேரக் கட்டைக்கூத்து ஆட்டக்காரர்களாகவும் இசைஞர்களாகவும் திகழ்ந்தார்கள்.
ராஜகோபால் தனது பத்தாவது வயதிலிருந்தே கட்டைக் கூத்துக் கலையில் ஈடுபட்டுவருகிறார். விடிய விடிய நடக்கும் கட்டைக்கூத்து நிகழ்ச்சிகளில் தந்தையின் குழுவில் குழந்தை வேடங்களில் நடித்து வந்தார். கட்டைக்கூத்தில் அவருக்கிருந்த மாறாத ஆசையினால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை; ஆறாவது வகுப்போடு கல்வியை முடித்துக்கொண்டு முழுநேரக் கட்டைக்கூத்துக் கலைஞராகிவிட்டார். தந்தையாரின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து, ராஜகோபால் தனது பத்தொன்பதாவது வயதிலேயே தந்தையின் கட்டைக்கூத்துக் குழுவான பெருங்கட்டூர் பொன்னுசாமி நாடக மன்றத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
மனைவி ஹன்னா எம். டி பூருயினுடன் காஞ்சிபுரத்தில் வசித்துவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பாற்கடல், விடுத்தல், ராமராவணா
கூத்துக் கலைஞர் பெருங்கட்டூர் ராஜகோபால், டச்சு நாட்டுச் சகோதரி ஹன்னா இருவரின் ஒருமித்தக் கூத்து மேலும்