Your cart is empty.
நாராயணி குப்தா
பிறப்பு: 1950
நாராயணி குப்தா: தில்லியிலுள்ள அழகான வரலாற்றுச் சின்னங்கள் அமைந்த இடங்களுக்குச் சிறுவயதில் சுற்றுலா சென்ற பல சந்தோஷமான தருணங்கள் நாராயணி குப்தாவின் நினைவில் இன்றுமிருக்கின்றன. குறிப்பாக, குதுப் மினாரின் உச்சிக்கு ஏறிச்சென்று, மேலிருந்து தெளிவான ஒளியில் நிலப்பரப்பைப் பார்த்த கணம். பழைய கட்டடங்களும் நிலப்பரப்புகளும் கடந்தகாலத்தை அறிந்துகொள்ள எப்படி உதவிகரமாக இருக்கின்றன என்பதைப்பற்றி அவரும் அவரது மாணவியரும் கலந்துரையாடுவது உண்டு. பாரம்பரியச் சின்னங்களை நடைப்பயணமாகச் சென்று பார்க்கும் குழுவில் பங்கேற்று, பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்கும் ‘காவல்காரராக’ச் செயல்பட்டிருக்கிறார். வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கவருபவர்கள் தங்களது கைப்பேசியைப் ‘பைக்குள்’ போட்டுக்கொள்வதைத்தான் இவர் விரும்புவார். இல்லாவிடில் அவர்கள், பழங்காலச் செங்கல்கள் மீது விழும் சூரிய ஒளியின் அழகு அல்லது தூரத்து வளைவு உச்சியின் காட்சி போன்றவற்றைப் பார்க்கத் தவறிவிடுவார்கள்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
குதுப்மினார்
தெற்கு தில்லி யிலிருக்கும் குதுப் மினார் 73 மீட்டர் உயரமுடையது; 5 நிலைகளைக் கொண்டது. 1192 முதல் 1 மேலும்