Your cart is empty.
சோஹைல் ஹாஷ்மி
பிறப்பு: 1930
சோஹைல் ஹாஷ்மி: இந்தியா முழுவதுமுள்ள அதிகம் அறியப்படாத இடங்களுக்குக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கையில் கேமிராவோடு பயணம் செய்வதில் ஹாஷ்மிக்கு மிகவும் விருப்பம். தில்லியின் அற்புதமான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் விதமாக 2005இல் ‘சோஹைலுடன் தில்லி பாரம்பரிய நடைப்பயணத்தை’ அவர் தொடங்கினார். இப்போது அதில் பெரியவர்களும் பங்கு பெறுகிறார்கள். இந்தியாவின் மரபைப் பற்றி மக்கள் மேலும் தெரிந்துகொள்வதற்காகத் திரைப்படங்களும் எடுத்துவருகிறார். சாஞ்சியைப் பற்றி எழுதுவதில் அவருக்கு உற்சாகமுண்டு. ஏனெனில் 2500 ஆண்டுகால வரலாறும் அழகான செதுக்குச் சிற்பங்களும் கொண்ட சாஞ்சி அவருக்குப் பிடித்த இடங்களில் ஒன்று