Your cart is empty.
இராக் பரூச்சா
பிறப்பு: 1935
டாக்டர் இராக் பரூச்சா: பகலில் மருத்துவர், இரவில் சூழலியல் நாயகர்! இந்தியாவின் அற்புதமான இயற்கைவளப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர். புத்தகம் வழியாக மட்டும் என்றில்லாமல் குழந்தைகள் இயற்கையை நேரடியாகக் கண்டு அதனோடு உரையாடி அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களைச் சரணாலயங்களுக்கும் பிற பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வதில் அவருக்குப் பெரும் ஈடுபாடு. இந்தியாவின் இயற்கை வளப் பாரம்பரியத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டபோதும், இன்றைய குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் நமது காடுகளையும் நதிகளையும் உயிரினங்களையும் பாதுகாப்பார்கள் என்பது அவரது நம்பிக்கை.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
கேவலாதேவ் பறவைகள் சரணாலயம்
18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரத்பூரின் மகாராஜா ராஜா சூரஜ்மால் கேவலாநாத் கோயிலுக்கு அருகில் மேலும்