Your cart is empty.
நீ. ராஜசேகரன் நாயர், ச. ராஜா, சா. சுந்தரபாலு
பிறப்பு: 1948,1963-2015,1975
நீ. ராஜசேகரன் நாயர் (பி. 1948)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் எம்.ஏ. பட்டமும் ச. அகஸ்தியலிங்கம் மேற்பார்வையில் முனைவர் பட்டமும் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில் 30ஆண்டுகள் பேராசிரியராகவும், அதே நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு அனுபவம் பெற்றவர். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூரு), ராஷ்ட்ரகவி கோவிந்தபை சம்சோதனா கேந்திரா (உடுப்பி) ஆகிய நிறுவனங்கள்நடத்திய அகராதியியல் கோடைக்காலப் பயிற்சிப் பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்.
மின்னஞ்சல் : rajasekharan245@yahoo.co.in
கைபேசி எண் : 94430 95447
ச. ராஜா (1963-2015)
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பி.எச்.டி., முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் துறை இயக்குநராகவும் பணியாற்றினார். ஜெர்மனி, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு அனுபவம் பெற்றவர். அகராதியியலில் பட்டய மேற்படிப்புப் பெற்றவர்.
சா. சுந்தரபாலு (பி. 1975)
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறையில் 12 ஆண்டுகாலமாக உதவிப்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தில் எம்.ஏ. மொழியியலும், எம்.ஏ. தமிழும்; பொருண்மையியலில் முனைவர் பட்டமும்; திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவசித்தாந்த ரெத்தினம் பட்டமும் பெற்றவர். இந்திய அரசின் ஐ.சி.சி.ஆர். சார்பில் போலந்து நாட்டில்
வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணி அனுபவம் பெற்றவர். 12 ஆண்டுகளாக மொழியியல் முதுகலை மாணவர்களுக்கு அகராதியியல் பாடம் நடத்திவருகிறார். ‘அல்பாசி’ என்ற புனைபெயரில் நூல்கள் எழுதிவருகிறார்.
மின்னஞ்சல் : sundarabalu@buc.edu.in
கைபேசி எண் : 97157 69995
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி
- பொருள் உணர்வோடும் வட்டார வழக்கு ஒப்பீட்டோடும் உருவாக்கப்பட்ட முதல் வேளாண் கலைச்சொல் அகராதி மேலும்