Your cart is empty.
வந்தனா சொனால்கர்
பிறப்பு: 1966
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராட்வாடா பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பேராசிரியராகப் பணியாற்றியவர். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் கல்வி நிறுவனத்தின் மகளிர் ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதம், பொருளியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்து 1989இல் மராத்தியில் வெளிவந்த ‘We Also Made History: Women in the Ambedkarite Movement’ புத்தகத்தை 2008இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.