Your cart is empty.
வல்லிக்கண்ணன்
பிறப்பு: 1920
ரா.சு. கிருஷ்ணசாமி என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (1920-2006)
திருநெல்வேலி இராஜவல்லிபுரத்தில் பிறந்தவர். கிராம ஊழியன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில்
பணியாற்றியவர். முழுநேர எழுத்தாளரான அவர் 75 நூல்களுக்கு மேல் எழுதியவர். புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும் (1977) என்ற நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
‘பாரதிதாசனின் உவமை நலம்’, ‘சரஸ்வதி காலம்’ (1986), ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’,
‘தமிழில் சிறு பத்திரிகைகள்’ ஆகியவை வல்லிக்கண்ணனின் குறிப்பிடத்தகுந்த நூல்கள்.