Your cart is empty.
வெங்கி ராமகிருஷ்ணன்
பிறப்பு: 1952
வெங்கி ராமகிருஷ்ணன் (பி. 1952)
இவர் தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்வியைப் பரோடாவில் பெற்றார். பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை (1971) மேற்கொண்டார். அமெரிக்காவின் ஓஹையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டமேற்படிப்பு மேற்கொண்டு பிஎச்டி பட்டம் (1976) பெற்றார். பின் உயிரியலில் ஆர்வம்கொண்டு சான் டிகோவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு வகுப்புகளில் இணைந்தார் (1978). அதன்பின் யேல் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவராகப் பணியாற்றினார் (1978-82). அங்கிருந்துதான் இவரது 'ரைபோசோம்' ஆய்வுப் பயணம் தொடங்குகிறது. ஓக் ரிட்ஜ், புரூக்ஹேவன் ஆகிய தேசிய ஆய்வகங்களில் பணியாற்றினார் (1983-95). இதே வேளையில் கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தில் ஓராண்டு மூலக்கூறுகளின் அமைப்பினை அறிவதற்கான படிக வரைபடத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பின் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நிறுவனமான MRCயின் (Medical Research Council) LMB (Lab. Of Molecular Biology) ஆய்வகத்தில் பணிபுரியத் துவங்கினார் (1999). இங்கு தனக்கான ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கிக்கொண்டார். ரைபோசோம்கள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். சிறந்த கருத்தரங்கங்களில் பங்குபெற்றார். வேதியியல் துறையில் 2009ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசினைப் பெற்றார். 2015-20 ஆண்டுகளுக்கான லண்டன் ராயல் சொஸைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.