Your cart is empty.
ஜோசலின் கல்லிட்டி
பிறப்பு: 1983
ஜோசலின் கல்லிட்டி
ஆஸ்திரேலியாவில் பிறந்து, கனடாவின் வடக்கு டோரண்டோவில் வளர்ந்தவர். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் சில காலம் வசித்திருக்கிறார். தற்போது அமெரிக்காவில் மிசோரி மாகாணத்திலுள்ள Truman State Universityஇல் படைப்பாக்கங்கள் குறித்துப் பயிற்றுவிக்கும் அவர் கொலம்பியாவில் வசித்துவருகிறார். சிறுகதைகளும் நாவல்களும் அபுனைவுகளும் எழுதியிருக்கிறார்.
‘Amah and the Silk-Winged Pigeons’ என்ற அவரது இந்த முதல் நாவல் 2018இல் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட சிறந்த புத்தகத்திற்கான பரிசைப் பெற்றது; இவரது இரண்டாவது நாவலான ‘The Envy of Paradise’ 2020க்கான International Book Awards for Multicultural Fictionஇன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. சீன இளம்பெண்கள் குறித்து கல்லிட்டி இயக்கிய ‘Going to the Sea’ என்ற ஆவணப்படம் தொலைக்காட்சிகளில் வெளியானதோடு, கனடாவின் REEL Women’s Film Festival நிகழ்வில் Lester B. Pearson விருதையும் வென்றுள்ளது.
ஜோசலின் கல்லிட்டியின் குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்துவந்துள்ளனர். அவரது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு, 1857இல், லக்னோவில் நடந்த சிப்பாய்க் கலகத்தில் ஐந்து மாதங்கள் பிணைக்கைதியாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த பெண் உறவினர் ஒருவரின் குறிப்பேட்டை ஜோசலின் தனது பதினான்காவது வயதில் கண்டெடுத்து வாசித்துள்ளார். அக்குறிப்பேட்டில் இடம்பெற்றிருந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘அமாவும் பட்டுப்புறாக்களும்’ நாவலை எழுதியுள்ளார்.