Your cart is empty.
ஹேரியட் ஆன் ஜேகப்ஸ்
பிறப்பு: 1813
ஹேரியட் 1813இல் ஈடென்டெல்லில் அடிமையாகப் பிறந்தார். இவருக்கு ஆறு வயதாகும்போது அவரது தாய் டிலைலா மறைந்தார். அதன் பின் இச்சிறுமி தன் தாயின் எஜமானியான மார்க்கரெட் ஹார்னி ப்ளோ வீட்டில் வசித்தார்.
மார்க்கரெட் இறந்தவுடன் அவர் எழுதிவைத்திருந்த உயிலின்படி ஹேரியட், ஜேம்ஸ் நார்காம் என்பவரது வீட்டில் அவரது மூன்று வயது மகளுக்கு அடிமையானார்.
வெறும் அடிமையாக மட்டுமின்றித் தன் பதின்பருவம் முழுவதும் பாலியல் சீண்டல்களுக்கும் தொடர்ந்து ஆளாக நேர்ந்த ஹேரியட் அந்தச் சிறையிலிருந்து தப்பிச் சென்றார். அடிமை முறை ஒழிப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் ஒரு கட்டத்தில் தன் அனுபவங்களை எழுத்தில் பதிவுசெய்யத் தொடங்கினார். தனது அடிமை வாழ்க்கையைப் பற்றி தானே எழுதிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இவரே.