Your cart is empty.
ந. முத்துசாமி
பிறப்பு: 1936
தமிழின் முக்கியமான எழுத்தாளர், நாடக ஆசிரியர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகளை எழுதிவந்தார்.
‘கூத்துப்பட்டறை’ என்னும் நாடகக் குழுவை நிறுவி நாடகங்களை எழுதித் தயாரித்துவந்தார். கூத்துப்பட்டறை என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது. தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.
இவர் எழுதிய ‘ந. முத்துசாமி கட்டுரைகள்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகையின் கீழ் பரிசு பெற்றிருக்கிறது. 2000ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாதெமியின் விருது பெற்றிருக்கிறார். இவரது கலைச் சேவையைப் பாராட்டி 2012ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.