Your cart is empty.
ச. பால்ராஜ்
பிறப்பு: 1988
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நெடுங்குளம் கிராமத்தில் பிறந்தவர். இவர் இளங்கலைத் தமிழிலக்கியத்தைச் சென்னை இலயோலா கல்லூரியிலும், முதுகலைத் தமிழிலக்கியத்தைப் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும், முதுகலை மொழியியல் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் (DDE), சென்னை சமஸ்கிருத பாரதியில் சமஸ்கிருதப் பட்டயப் படிப்பையும் முடித்து, புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் – சமஸ்கிருத நிகண்டுப் பொருண்மையில் ஒப்பாய்வுசெய்து இளமுனைவர் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். தமிழ் – சமஸ்கிருத நிகண்டு குறித்துத் தொடர்ந்து எழுதியும் சிந்தித்தும் வருகிறார். தற்பொழுது கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.