Your cart is empty.
பா.அ. ஜயகரன்
பிறப்பு: 1964
பா.அ. ஜயகரன் (பி. 1964)
இலங்கையில் பிறந்து அரசியல் காரணங்களால் 1986இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொரன்டோ நகரில் வாழ்ந்துவருகிறார். புலம்பெயர் தமிழ்ச் சூழலில் முக்கியமான நாடக எழுத்தாளராகவும் நெறியாளராகவும் கணிக்கப்படுகிறார். இதுவரை பதினாறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்திருக்கிறார். இவரது நாடகப் பிரதிகளில் சில ‘எல்லாப் பக்கமும் வாசல்’ (2000), ‘என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள்’ (2004) எனும் நூல்களாக வெளியாகியுள்ளன. கனேடிய, இலங்கை, ஐரோப்பா, இந்தியச் சிற்றிதழ்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. இவரின் சில சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘பா.அ. ஜயகரன் கதைகள்’ (2019) எனும் நூலாக வெளிவந்திருக்கிறது.
கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் 2021ஆம் ஆண்டின் புனைவுக்கான இயல் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். கனடாவில் வெளியான பல இசை முயற்சிகளில் இவரது பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. 1989இல் ரொரன்டோ தமிழ்ச் சூழலில் மாற்றுக் கருத்துக்கான தளமாக உருவாகிய தமிழர் வகைதுறைவள நிலையத்தின் (தேடகம்) ஆரம்பகால உறுப்பினராக
இருந்து அதன் இயக்குநர்களில் ஒருவராகத் தொடர்ந்து செயல்பட்டுவருபவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அவனைக் கண்டீர்களா
பா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்பு களாலும் கைவிடப்பட்ட, துண்டாடப் பட் மேலும்