Your cart is empty.
ஸ்ரீதர கணேசன்
பிறப்பு: 1954
ஸ்ரீதர கணேசன் (பி. 1954)
கற்றலின் குறைபாடு என்கிற பாதிப்புக்குள்ளான ஸ்ரீதரகணேசன் மிகுந்த சிரமத்திற்கிடையில் 1970இல் ஏழாம் வகுப்பில் நுழைந்து அந்த ஆண்டே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறியவர். அவரது தந்தை பலவேசம் களிமண்ணில் சிற்பங்கள் செய்துவந்த சுதைமண் சிற்பக் (டெரகொட்டா) கலைஞர்; தாய் லட்சுமி நூற்பாலை தொழிலாளியாக இருந்தவர். இவருக்கு சுசீலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
தூத்துக்குடி நூற்பாலைத் தொழிலாளியாக 20 வருடம் பணிபுரிந்தவர். மேலும் 20 வருடமாகத் தூத்துக்குடி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் தினக் கூலியாக பணிபுரிந்தார். ‘சந்தி’, ‘வாங்கல்’, ‘அவுரி’, ‘சடையன்குளம்’ போன்ற நாவல்களும் மூன்று குறுநாவல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ‘தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர்கள்’ என்கிற ஆய்வு நூலையும் எழுதி முடித்திருக்கிறார்.
இவரைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த இலக்கிய ஆளுமையாகத் தேர்வு செய்து வருகைதரும் பேராசிரியராகப் பணியமர்த்தியது. 2022ஆம் ஆண்டுக்கான திருநெல்வெலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருதைப் பெற்றார். மேலும் இவரது ‘உப்புவயல்’ என்ற நாவல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நாவலுக்கான விருதை 1996ஆம் ஆண்டு பெற்றது. தூத்துக்குடி ராஜபாண்டியன் சாராள் இலக்கிய சாதனையாளர் விருதையும் பலவேறு அமைப்புகளிலிருந்து சிறந்த நாவலுக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
2007இல் திருப்பூரில் நடந்த சுதந்திரப் பொன்விழா நாவல் போட்டியில் ‘சந்தி’ நாவல் கையெழுத்துப் பிரதியிலேயே முதல் பரிசு பெற்றது