Your cart is empty.
சந்தோஷ் குமார் அப்பு
பிறப்பு: 1977
இவரது முதல் சிறுகதை ‘பேய்’, காலச்சுவடு வெளியீடாக வந்த ‘புதிய சலனங்கள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது. 2003இல் ‘கதா’ அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம் படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் அக்கதை தேர்வு பெற்றிருந்தது. கவிதாசரண், அரும்பு போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
தக்கலை கத்தோலிக்க மறைமாவட்டத்தில் அருட்பணியாளராகப் பணியாற்றிவரும் இவர், கடந்த பதினோரு ஆண்டுகளாக இளையோர் மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். உரோமை சலேசியன் பல்கலைக்கழகத்தில் இளையோர் பணியைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கைப்பேசி : 09443086105
மின்னஞ்சல் : ssanjoseph@gmail.com