Your cart is empty.
சீர்ஷேந்து முகோபாத்யாய்
பிறப்பு: 1935
வங்கமொழி நாவலாசிரியர், சிறுகதையாசிரியர். சிறார் இலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் பங்களிப்பு செய்ததன் மூலம்
அம்மொழியில் தனித்த இடம் பிடித்திருப்பவர். 1989இல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற இவருக்கு 2021இல் சாகித்ய
அகாதெமி ஃபெல்லோஷிப் வழங்கி கௌரவப்படுத்தப்படுத்தியுள்ளது. இன்றைய வங்கதேசத்தின் மைமன் சிங் நகரத்தில்
பிறந்த இவரது இளமைக்காலம் பிகார், வங்காளம், அஸ்ஸாமில் கழிந்தது. கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து
வங்கமொழியில் முதுகலைப்பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிப் பின்னர் பத்திரிகையாளராகப்
பணியாற்றத் தொடங்கினார். ஆனந்தபஜார் பத்திரிகையில் பணியாற்றிவர். முதல் கதை 1959இல் வெளியானது. இவரது பல
கதைகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. தமிழில் இவரது படைப்புகளாக என்பிடி வெளியீட்டில் ‘கறையான்’ என்ற நாவலும்,
‘வங்கச் சிறுகதைகள்’ தொகுப்பில் ஒரு கதையும் வெளிவந்துள்ளன. இவரது குறுநாவல் ‘அத்தைக்கு மரணமில்லை’ காலச்சுவடு
வெளியீடாக வந்துள்ளது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ராமன் வனவாசம் போன வழி ஒரு தேடல்
ராமன் வனவாசம் போகையில் எந்த வழியாகப் போயிருப்பான்? வால்மீகி ராமாயணம் நமக்கு ஓரளவு சரியான இட வர்ணன மேலும்