Your cart is empty.

தொமா பிக்கெத்தி
பிறப்பு: 1971
தொமா பிக்கெத்தி இன்று பிரபலமாகப் பேசப்படும் பொருளாதார நிபுணர்களில் ஒருவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பொருளாதாரச் சிந்தனையார்.
‘இருபத்தியோராம் ஆண்டில் மூலதனம்’ (Le Capital au XXIe siècle, 2013) என்னும் அவருடைய நூல் ஏராளமான வரைபடங்களையும் புள்ளி விவரங்களையும் உள்ளடக்கியது. 900 பக்கங்கள் கொண்டது. அமெரிக்காவில் 4,50,000 பிரதிகளும், பிரான்ஸில் 1,50,000 பிரதிகளும் விற்பனையானது. பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலிலுள்ள கட்டுரை 2022ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி இனவியல் சங்கம் சார்பில் கேபிரான்லி மியூசியத்தில் தொமா பிக்கெத்தி ஆற்றிய உரையின் மொழியாக்கம்.
இது பிக்கெத்தியின் பொருளாதாரக் கொள்கையையும், பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் குறைப்பதற்கு அவர் முன்வைக்கும் பரிந்துரையையும் பிரதிபலிக்கிறது.
இக்கட்டுரை அவருடைய ஆழ்ந்த பொருளாதாரச் சிந்தனைக்கும், அவர் எடுத்துரைக்கும் தெளிவான விளக்கங்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.