Your cart is empty.
உமா சங்கரி
பிறப்பு: 1953
திருமதி உமா சங்கரி கோயில்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து தில்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சமீபகாலத்தில் மத அடிப்படைவாதம், மதக்கலகங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் கலந்துகொண்டு பணியாற்றுகிறார். முப்பது ஆண்டு களுக்கும் மேலாகத் திருப்பதி அருகே ஒரு குக்கிராமத்தில் தன் கணவருடன் வசித்தவாறு விவசாயத்தை மேற்பார்வை செய்துகொண்டு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளி களின் போராட்டங்களில் பங்குகொண்டு பணியாற்றி வந்திருக்கிறார். அவற்றைப் பற்றிப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களிலும் இவருடைய பங்கு உண்டு. காலம் சென்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மகளாகிய இவர் தி.ஜா.வின் எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தந்தையார் பற்றி 'மெச்சியுனை' என்ற நூலை எழுதியிருக்கிறார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்திற்குத் 'திஜாவின் படைப்புலகம்' என்ற நூலைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
தற்போது ஹைதராபாதில் வசித்துவருகிறார்.
தொடர்புக்கு: umanarendranath@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அறிந்ததும் அறியாததும்
-கோயில் என்றால் என்ன, இந்து மதத்தில் கோயில்களின் இடம் என்ன,
கும்பிடும் தெய்வங்கள் எத்தனை, மேலும்